Friday, April 11, 2008

காதலே நீ வந்தாலே !

பசியின்மை
பவித்ரமாய் போற்றப்படும் !

தூக்கமின்மை
துளித் துளியாய் ரசிக்கப்படும் !

கிறுக்கல்கள்
கவிதைகள் ஆகிப்போகும் !

உளறல்கள்
உருக்கும் வார்த்தைகளாய் ஆகும் !

கனவுகளே
நாளின் முக்கால்
பாகம் ஆட்சி செய்யும் !

கண்ணாடி கூட
கதைகள்
பேசி விட்டுப்போகும் !

காத்திருத்தல் கூட
கற்கண்டாய் இனிக்கும் !

மனசு
பூமிப் பந்தைச் சுமப்பது போல
பாரமாய் இருந்தாலும்
வானமே எல்லையாய்
பறந்து திரியும் !

இதயம் வலம் மாறித் துடிக்கும் !

இவை எல்லாம்
மனசுக்குள்
காதலே நீ வந்தாலே!

காதலை ரசிப்பது
மீனாள்
meenakshisundaramp@gmail.com

0 comments: