Showing posts with label பொன் மொழிகள். Show all posts
Showing posts with label பொன் மொழிகள். Show all posts

Tuesday, March 17, 2009

பெரியவங்க இப்படி சொல்லியிருக்காங்க...

பொன் மொழிகள்:
 
31. பாதையைத் தேடாதே. உருவாக்கு. - லெனின்
 
32. தவறான பாதையில் வேகமாகச் செல்வதைவிட, சரியான பாதையில் மெதுவாகச் செல். - புத்தர்
 
33. பணத்தைக் கொண்டு கடவுளைக் கண்டுபிடித்துவிட முடியாது.
 
34. சும்மா ஆடுற பேய்க்கு சாம்பிராணி புகை போட்டால் சொல்லவா வேண்டும்.
 
35. சொல்லக் கூடாத பேச்சானால் அதை சொல்லாமல் இருப்பதே மேல். - மகாவீரர்
 
36. குரு மொழி கேளார் நற்கதி பெறார். - கீதை
 
37. காலத்துக்கு பாகுபாடு கிடையாது. யார் மீதும் அதற்குப் பாரபட்சம் இல்லை. - தாமஸ்மான்
 
38. நீ அமைதியாக வாழ விரும்பினால் சந்தேகப்பேர்வழியாக இராதே.
 
39. வாழ்க்கை இரண்டு பகுதிகளை உடையது. சென்ற காலம் ஒரு கனவு. வருங்காலம் ஓர் ஆசை.
 
40. அன்புள்ள இடத்தில் நீர் இனிக்கும். - கன்பூசியஸ்

Thursday, February 12, 2009

எந்நாளும் அழியா "பொன்மொழிகள்"

21. மரணத்தைப் பற்றிக் கவலைப்படாதே. நீ இருக்கும்வரை அது வரப்போவதில்லை. அது வரும்போது நீ இருக்கப் போவதில்லை! - விவேகானந்தர்
 
22. உலகம் உன்னை அறிவதைவிட, உன்னை உலகிற்கு அறிமுகம் செய்துகொள்! - அப்துல்கலாம்
 
23. தடம் பார்த்து நடப்பவன் மனிதன். தடம் பதித்து நடப்பவன் மாமனிதன்! -ஃபிடல் காஸ்ட்ரோ
 
24. நீ வெளிச்சத்தில் சென்றால் உலகமே உன்னைப் பின்தொடரும். ஆனால் நீ இருட்டினில் சென்றால் உன் நிழல் கூட உன்னைப் பின்தொடராது. - ஹிட்லர்
 
25. நம்மை வெல்ல யாரும் இங்கு பிறக்கவில்லை என்பது பொய். மற்றவரை வெல்ல நாம் இங்கு பிறந்திருக்கிறோம் என்பதே உண்மை!
 
26. முடிவெடு. அதை நீ முடித்துவிடு!
 
27. கோபம் என்பது பிறர் செய்யும் தவறுக்கு, உனக்கு நீயே கொடுத்துக்கொள்ளும் தண்டனை! - புத்தர்
 
28. நண்பன் சிறந்தவனாக இருக்கவேண்டும் என்று எண்ணாதே. அவன் சிறந்தவனாக இருக்க நீ உதவிகரமாக இரு! - தெரசா
 
29. வெற்றி என்பது உன் நிழல் போல. நீ அதைத் தேடிப்போகவேண்டியதில்லை. நீ வெளிச்சத்தை நோக்கி நடக்கும்போது, அது உன்னுடன் வரும்! -அப்துல்கலாம்
 
30. கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே. உன்னைக் கொன்றுவிடும். கண்ணைத் திறந்து பார்; காணாமல் போய்விடும்! - அப்துல்கலாம்

Saturday, March 29, 2008

பொன்மொழிகள் : 11-20

11. உள்ளூர் மாடு விலை போகாது ! - ரோஜர் கென்னடி
 
12. நேற்று செய்த தவறை ஒப்புக்கொண்டால்
இன்று நீ அறிவாளி ஆவாய் ! - ஸ்ரீசாரதா தேவியார்
 
13. மனத்திருப்தி கொள்ளும் இயல்பே
மனிதனின் மகத்தான பலம் ! - ஜார்ஜ் ஹெர்பர்ட் பாமர்
 
14. பொறாமை மடமையின் மிகத் தெளிவான அடையாளம் ! - மெஹர் பாபா
 
15. தீமை விரைவில் செயல்படும்.
அதன் புண் நீண்ட காலம் ஆறாது ! - மகான்
 
16. உண்மையாக நடந்துகொள்ளும் மனிதனுக்கு
எந்த உபதேசமும் தேவையில்லை ! - மகாவீரர்
 
17. ஓடுகிற கழுதையை வாலைப் பிடித்தால்,
உடனே கொடுக்கும் பலன் !
 
18. ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய் சொல்லவேண்டும் !
 
19. களவு கற்றாலும் தன்னைக் காக்கவே கற்கவேண்டும் !
 
20. கழுத்து வெளுத்தாலும் காகம் கருடன் ஆகுமா?

Wednesday, March 26, 2008

பொன்மொழிகள் : 1-10

1. பக்தியோடு இருந்தாலும்
சுத்தியலை பலமாகத்தான் அடிக்கவேண்டும் !
 
2. பலரிடம் ஆலோசனை கேள் - ஆனால்
முடிவை நீயே தேர்ந்தெடு !
 
3. எதுவுமே தெரியாதவனுக்கு
எதிலுமே சந்தேகமில்லை !
 
4. மிகச் சிறிய பொருளுக்கும் சொந்தக்காரன் இருப்பான்.
கஞ்சனுக்கும் நண்பன் இருப்பான் !
 
5. கம்மாளனிடம் (சிற்பி) மாடு வாங்கினால்.
காதை அறுத்துப் பார்த்துதான் வாங்கவேண்டும் !
 
6. எங்கு அன்பு முடிவடைகிறதோ,
அங்கு கொடுங்கோலாட்சி ஆரம்பமாகிறது ! - வில்லியம் டே
 
7. கற்றும் கெட்டதைச் செய்பவன் குருடன்;
நல்லது கேட்காதவன் செவிடன் ! - ஆதி சங்கரர்
 
8. அமைதியிலும், அசையா உறுதியிலுமே
நம் வலிமை உள்ளது ! - ஓசாயா
 
9. மரியாதைக்கு விலையிலை. ஆனால் அது
எல்லாவற்றையும் விலைக்கு வாங்கிவிடுகிறது ! - மாண்டேகு
 
10. வாழ்க்கையில் எல்லாவற்றையும் போட்டுத் திணிப்பது
வாழ்க்கையை வளப்படுத்தாது !