உணவு உண்ணும்போது, கறிவேப்பிலையை பார்த்தவுடன், ஏதோ கரப்பான்பூச்சியைப் பார்த்ததுபோல் நாம் தூக்கி எறிகிறோம். கறிவேப்பிலையின் நன்மைகளை அறியாததால்தான் நாம் இவ்வாறு செய்கிறோம்.
Monday, March 30, 2009
நீ கறிவேப்பிலை மாதிரி?
Posted by "உழவன்" "Uzhavan" at 3/30/2009 12:24:00 PM 3 comments
Labels: தமிழ் மருத்துவம்
Friday, February 13, 2009
உடல் இளைக்கவும், பருக்கவும் தண்ணீரே காரணம்
Posted by "உழவன்" "Uzhavan" at 2/13/2009 08:06:00 AM 2 comments
Labels: தமிழ் மருத்துவம்
Friday, February 6, 2009
உப்பின் மகத்துவம் தெரியுமா உங்களுக்கு?
Posted by "உழவன்" "Uzhavan" at 2/06/2009 11:29:00 AM 3 comments
Labels: தமிழ் மருத்துவம்
Thursday, January 22, 2009
இசை மருத்துவம் - இசை கேளுங்கள் ! இன்பமாய் வாழுங்கள் !
Posted by "உழவன்" "Uzhavan" at 1/22/2009 08:54:00 AM 0 comments
Labels: தமிழ் மருத்துவம்
Thursday, July 24, 2008
பால் அருந்துவோம்! எலும்புகளைக் காப்போம்!
| |||||||
Posted by "உழவன்" "Uzhavan" at 7/24/2008 06:14:00 PM 0 comments
Labels: தமிழ் மருத்துவம்
Thursday, June 26, 2008
மாதுளையின் மகத்துவம்
மாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று ரகங்கள் உள்ளன. இனிப்பு மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் இதயத்திற்கும், மூளைக்கும் மிகுதியான சக்தி கிடைக்கிறது. பித்தத்தைப் போக்குகிறது இருமலை நிறுத்துகிறது.
புளிப்பு மாதுளையைப் பயன்படுத் தினால் வயிற்றுக் கடுப்பு நீங்குகிறது. ரத்த பேதிக்குச் சிறந்த மருந்தாகிறது. தடைபட்ட சிறுநீரை வெளியேற்று கிறது. பித்தநோய்களை நிவர்த்தி செய்கிறது. குடற்புண்களை ஆற்றுகிறது. எந்த வகையான குடல் புண்ணையும் குணமாக்குகிறது. மாதுளம் விதைகளைச் சாப்பிட்டால் இரத்தவிருத்தி ஏற்படும். சீதபேதிக்குச் சிறந்த நிவாரணம் அளிக்கும்.
தொடர்ந்து நோயின் பாதிப்பால் பலகீனம் அடைந்தவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் உடல் தேறும், உடல் எடை கூடும். தொண்டை, மார்பு, நுரையீரல், குடலுக்கு அதிகமான வலிமையை உண்டாக்குகிறது. ஆண் தன்மையில் பலகீனம் உள்ளவர்கள் மாதுளம்பழம் சாப்பிடுவதால் மிகுந்த சக்தியை அடைய முடிகிறது.
மாதுளம்பழத்தைச் சாப்பிட்டால் விக்கல் உடனே நிற்கும், அதிக தாகத்தைப் போக்கும். மாதுளம் பழச்சாற்றில் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் உடல் சூட்டு நோய்கள் நீங்கும். சரீரம் குளிர்ச்சியடையும். காய்ச்சல் தணியும். மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து காலை ஆகாரத்துக்குப் பின் தினமும் சாப்பிட்டால், ஒரு மாத உபயோகத்தில் உடல் ஆரோக்கியமும் தெம்பும் உண்டாகும். புதிய ரத்தம் உற்பத்தியாகிவிடும். மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால், இருமல் நிற்கும்.
மாதுளம் பூச்சாறு, அருகம்புல் சாறு சமமாகச் சேர்த்து வேளைக்கு 30 மில்லி வீதம் தினசரி மூன்று வேளையாக மூன்று தினங்களுக்குக் கொடுத்தால் பெண்களுக்கு ஏற்படும் உதிரப்போக்கு நிவர்த்தியாகும். மாதுளம் பூச்சாற்றை 15 மில்லியளவு சேகரித்து சிறிது கற்கண்டு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இரத்த மூலம் நீங்கும். மூலக் கடுப்பும், உடல் சூடும் தணியும். வாந்தி, மயக்கத்திற்குக் கொடுத்தால் நோய் தீரும்.
மாதுளம் பூக்கள் 15 கிராம் எடுத்து 25 கிராம் சீனி சேர்த்து மசிய அரைத்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால், தொல்லைப்படுத்தும் பெண்களின் வெள்ளைப்பாடு நிவர்த்தியாகும். மாதுளம் பூக்களைத் தலையில் வைத்துக் கொண்டால் தலைவலி, வெப்பநோய் தீரும்.
Posted by "உழவன்" "Uzhavan" at 6/26/2008 05:36:00 PM 1 comments
Labels: தமிழ் மருத்துவம்
Wednesday, June 18, 2008
நெல்மணியால் ஈறில் கீறினால் பல் முளைக்குமா?
டாக்டர் கதிரேசன், பல் மருத்துவர், சென்னை:
''பொதுவாக குழந்தைகளுக்கு எட்டு மாதத்தில் பற்கள் முளைக்க ஆரம்பிக்கும். உங்கள் குழந்தைக்கு தற்போது இரண்டு வயது ஆவதால் குறைந்தது எட்டுப் பற்களாவது முளைத்திருக்க வேண்டும். ஆனால், லட்சத்தில் ஒரு குழந்தைக்கு இப் படி பால் பற்கள் முளைக்காமல் போகும். இவர்களுக்கு ஆறு வயதுக்குப்பின், நிரந்தர பற்கள் முளைக்க ஆரம்பிக்கும். மிக அரிதாக சிலருக்கு பால் பற்கள், நிரந்த பற்கள் இரண்டுமே முளைக்காது.
இத்தனை நாட்கள் ஆகியும் உங்கள் குழந்தைக்கு பற்கள் முளைக்காதது கவனிக்க வேண்டிய விஷயம். முதலில் உங்கள் குழந்தையின் ஈறுகளில் பற்கள் இருக்கிறதா என்று எக்ஸ்ரே எடுத்துப் பார்க்க வேண்டும். காரணம் சிலருக்கு பால் பற்கள் இருந்தும் கூட ஈறுகள் தடிப்பாக இருந்தால், பற்கள் முளைக்காமல் போக வாய்ப்புண்டு. எக்ஸ்ரேயில் பற்கள் இருப்பது தெரிய வந்தால், பல் மருத்துவரை அணுகி பற்கள் முளைப்பதற்கான சிகிச்சையை மேற்கொள்ளுங்கள்.
அதற்காக ஈறுகளில் நெல்லால் கீறி விடுவது போன்ற செயல்கள் கண்டிப்பாக வேண்டாம். ஈறுகளின் உள்ளே இருக்கும் பற்கள், இதனால் சிதைவுறும் ஆபத்து இருக்கிறது.
ஒருவேளை, ஈறுகளுக்குள் பற்கள் இல்லை எனில் நிரந்தர பற்கள் வளரும் வரை, செயற்கை பற்கள் பொருத்துவது அவசியம். ஏனெனில், ஆறு வயது வரை பற்கள் இல்லாவிடில் குழந்தையின் பேசும் திறனிலும் ஜீரணத் தன்மையிலும் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, உடனடியாக பல் மருத்துவரை அணுகி, சிகிச்சை மேற்கொள்ளுங்கள்.''
Posted by "உழவன்" "Uzhavan" at 6/18/2008 08:35:00 AM 0 comments
Labels: தமிழ் மருத்துவம்
Tuesday, June 17, 2008
தொப்புளை எப்படி சுத்தம் செய்வது?
தாய்க்கும் சேய்க்குமான உறவு மட்டுமல்ல.. உணவுப் பாலமும் தொப்புள்கொடிதான். பிறந்த குழந்தையின் தொப்புள்கொடி ரத்தத்தில் இருந்து எடுக்கப்படும் ஸ்டெம் செல் மூலமாக எத்தகைய நோய்களை குணப்படுத்த முடியும் என்று மருத்துவ உலகில் ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த தொப்புளை எப்படி சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்பது பற்றிச் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தோல் மருத்துவ நிபுணர் டாக்டர் செந்தமிழ் செல்வி..
''பொதுவாக தங்கள் உடலின் மீது அதிக அக்கறை எடுத்துக் கொள்ளும் நபர்கள் கூட கவனிக்காமல் விட்டு விடும் பகுதி தொப்புள். குளிக்கும்போது உடலை நன்றாக தேய்த்து சுத்தப் படுத்தினால் கூட தொப்புள் பகுதி சுத்தமாவதில்லை. அது சருமத்தின் மட்டத்தில் இருந்து சற்றுக் குழிவடைந்து இருப்பதே இதற்குக் காரணம்.
இதனால், தொப்புளுக்குள் அதிக அழுக்கு சேர்ந்து விடுவதும், அதில் பாக்டீரியா தொற்று ஏற்பட்டு துர்நாற்றம் வீசுவதும், அரிப்பு ஏற்படுவதும் பரவலாக பலரும் சந்திக்கும் பிரச்னைகள்.
இதை அப்படியே கவனிக்காமல் விட்டுவிட்டால் தொப்புளுக்குள் சிறு சிறு கட்டிகள் ஏற்பட்டு அது புண்ணாகி விடவும் வாய்ப்புள்ளது. சிலர் தொப்புளுக்குள் சேர்ந்த அழுக்கை சுத்தம் செய்கிறேன் என்று நகத்தால் சுரண்டுவார்கள். அப்படி சுரண்டும்போது சின்ன கீறல் விழுந்தால்கூட அதில் பாக்டீரியா தொற்று ஏற்பட்டு சீழ் கட்டிவிடும் வாய்ப்புகள் அதிகம்.
பொதுவாக தொப்புள் பகுதியில் புண் ஏற்பட்டால் அது ஆறுவதற்கு வெகுநாட்கள் ஆகும். காரணம், புண் ஏற்பட்ட பிறகு தொப்புளை சுத்தம் செய்வதும் அந்த இடத்தில் வியர்வை படாமல் பாதுகாப்பதும் மிக மிகக் கடினம்.
பெரியவர்களை விட குழந்தைகள்தான் இந்தப் பிரச்னையால் அதிகம் பாதிக்கப்-படுகிறார்கள். தொப்புள் என்ற பகுதியின் முக்கியத்துவமும் அதை சுத்தம் செய்யும் முறையும் தெரியாததுதான் இதற்குக் காரணம். சின்ன வயதில் இருந்தே தினமும் தொப்புளை சுத்தம் செய்யச் சொல்லி குழந்தைகளைப் பழக்குவதே இதற்கான தீர்வு.
சரி.. தொப்புளை எப்படி சுத்தம் செய்வது?
தினமும் குளிக்கும்போதே நகம் இல்லாத விரலால் தொப்புளுக்குள் கொஞ்சம் சோப்பு போட்டு மென்மையாக சுத்தம் செய்யலாம்.
பல நாட்கள் கவனிக்காமல் விட்டதால் தொப்புளில் அதிக அழுக்குகள் சேர்ந்து விட்டதை உணர்கிறீர்களா? தலைக்குப் போடுகிற ஷாம்புவை தண்ணீரில் கரைத்து தொப்புளில் ஊற்றி சிறிது நேரம் ஊற வைத்து பஞ்சால் துடைத்து விட்டால் அழுக்குகள் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்."
Posted by "உழவன்" "Uzhavan" at 6/17/2008 04:59:00 PM 0 comments
Labels: தமிழ் மருத்துவம்
Monday, May 19, 2008
அவரை மருத்துவம்
Posted by "உழவன்" "Uzhavan" at 5/19/2008 08:37:00 AM 1 comments
Labels: தமிழ் மருத்துவம்
Saturday, May 17, 2008
கீரைகளின் குணங்கள்
முருங்கைக்கீரை
இது ஒரு சத்து நிறைந்த கீரை, ஆண்மையை அதிகரிப்பது, குருதியை தூய்மைப்படுத்தும் இரும்புச் சத்துக் கொண்டது, உடல் வெப்பத்தை தணிப்பது, மலச்சிக்கலை போக்குவது. மாதவிடாய் தறுவாயில் வலியிருந்தால் முருங்கை கீரை சாற்றில் உப்பு போட்டு அருந்தினால் வலி மறையும். வயிற்றுப்புண் ஏற்படாமல் தடுக்கும். பிற மருந்துகளின் பக்க விளைவுகளை அகற்ற இதன் சாறு உதவும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இருதய நோய்களின் தாக்குத லிருந்து தப்பிக்கலாம். சிறுநீரைப் பெருக்குவதால் உயர் ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் பக்க விளைவுகள் ஏற்படுத்தும் மாத்திரைகளை நிதமும் எடுத்துக் கொள்வதிலிருந்து தப்பிக்கலாம். கருவுற்றோர் வாரம் ஒரு முறை சாப்பிட்டால் நீர் இறங்கும். கை பாத வீக்கத்தை தடுக்கும். சோகையை போக்கும்.
பசலைக்கீரை
குளிர்ச்சி தருவதில் சிறந்தது, நீர் உடலினர் அடிக்கடி சாப்பிடக் கூடாது. நீரைப் பெருக்கும். பால் சுரக்கும். வயிற்று புண்ணாற்றும், கண்ணொளி தரும்.
சிறுகீரை
உடல் தளர்ச்சியை போக்கி ஊக்கமூட்டுவது, மலச்சிக்கலைப் போக்குவது, குடலின் பலத்தை அதிகரிப்பது, உடல் பித்தத்தை குறைப்பது.
வெந்தயக்கீரை
முருங்கை போலவே இரும்புச் சத்துடையது. உடலுக்கு ஊக்கத்தை அளிப்பது, வயிற்றுப் புண்ணை ஆற்றுவதில் சிறந்தது, கண்ணிற்கு மிகவும் நல்லது, பேதி சமயத்தில் சப்பிட்டால் பேதியை கட்டுபடுத்தவல்லது.
அரைக்கீரை
நீலிக்கு அடுத்து விஷங்களை முறிக்கும் ஆற்றல் அரைக்கீரைக்கு உண்டு. ஆங்கில மருந்துகளின் வேகத்தைப் பக்க விளைவுகளை முறியடிக்கும், தேமல், சொறி சிரங்கு உள்ளவர்கள் இந்தக்கீரையை தினசரி உணவுப்பழக்கத்தில் சேர்த்துக் கொண்டால் குணமாகிவிடும்.
அகத்திக் கீரை
வெப்பத்தை தணிக்கும், உள் சூட்டை அகற்றுவதால் இதற்கு அகத்தி என்ற பெயர் ஏற்பட்டது, அனைத்து வகையான சத்துகளையும் உடையது இந்த கீரைதான், குடல், குருதியை தூய்மைப் படுத்தும். குடற்புழுவை கொல்லும், பித்தத்தை தணிக்கும். தலைச்சுற்று, மயக்கம் ஆகியவற்றைப் போக்கும், உடலில் எந்த வகையில் விஷம் சேர்ந்திருந்தாலும் அதை முறிக்கும் தன்மை இதற்குண்டு, ஆனால் இதை அடிக்கடி சாப்பிட்டால் பேதி ஏற்படும்.
மணத்தக்காளி கீரை
குடல் புண்ணை ஆற்றுவதில் முதன்மையானது, குடலுக்கு பலமளிப்பது, பெண்மையை வளர்ப்பது, மங்கையருக்கு மார்பை வளரச்செய்வது, கருப்பை குறைப்பட்டையை நீக்குவது, குடற்புழுவை அகற்றுவது.
பாலக்கீரை
உடலுக்கு வலுவூட்டுவது, மலச்சிக்கலைப் போக்கும். குளிர்ச்சியைத் தரும். குடல் நோய்களுக்கு நல்லது.
குமட்டிக் கீரை
இது தாமிரச் சத்துடையது. குருதியை தூய்மைப்படுத்துவது மலத்தை இளக்கும் தன்மை உடையது, கருவுற்ற மகளிருக்கு இது நல்லது, உடல் நீரை அதிகரிக்கவல்லது.
தொய்யல் கீரை
தொய்ந்து போன நாடி நரம்புகளை வலுவாக்கும், உடலுக்கு ஊக்கமூட்டுவது, குளிர்ச்சியானது, செரிப்பாற்றலை மிகுவிக்கும், மலச்சிக்கலை போக்கும், வாத நோயாளிக்கு ஏற்றது, பேறு காலத்திற்கு பின்பு மகளிர் சாப்பிட ஏற்றது. உடலைத் தேற்றும்.
புளிச்சக் கீரை
உடலுக்கும் குடலுக்கும் வளமூட்டும். வயிற்றுப் புண்ணை ஆற்றும். வயிற்றுக் கடுப்பு உள்ளவர்கள் இக்கீரையை வெங்காயம், வெந்தயம் போட்டு மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் உடனே நிவாரணம் தெரியும். குடல் பலவீனத்தால் ஏற்படும் பேதி நிற்கும், குருதிப் போக்கை குறைக்கும்.
Posted by "உழவன்" "Uzhavan" at 5/17/2008 08:35:00 AM 0 comments
Labels: தமிழ் மருத்துவம்
Wednesday, May 7, 2008
இஞ்சி மருத்துவம்
Posted by "உழவன்" "Uzhavan" at 5/07/2008 07:38:00 PM 1 comments
Labels: தமிழ் மருத்துவம்
Saturday, May 3, 2008
தாய்மார்கள் கவனிக்க...
உடல் நிலை பாதிக்கப்பட்ட பெண்கள் அல்லது மிகவும் பலவீனமான பெண்களுக்கு குழந்தை பிறந்ததும் அவர்களுக்கு பால் சுரக்கும் தன்மை குறைய வாய்ப்புண்டு.
இது போன்ற பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பதற்கான டிப்ஸ்:
அரிசி மற்றும் வெந்தயத்தை சம அளவில் எடுத்துக்கொள்ளவும். இவற்றை விழுதுபோல் நன்றாக அரைத்து கொள்ளவும். இதை இளம் சூடான கஞ்சியில் கலந்து குடிக்கவும்.
இதுபோன்று தினமும் இருவேளை தாய்மார்கள் குடித்து வந்தால், அவர்களுக்கு பால் சுரப்பு அதிகமாகும்.
Posted by "உழவன்" "Uzhavan" at 5/03/2008 07:50:00 AM 0 comments
Labels: தமிழ் மருத்துவம்
Friday, April 25, 2008
தாய்மார்கள் பால் சுரப்பதை நிறுத்தவேண்டுமா?
மல்லிகை மருத்துவம்
தாய்மார்கள் பால் சுரப்பதை நிறுத்த முடியாமல், ஒரு குறிப்பிட்ட வயது கடந்தும், கைக்குழந்தைக்கு பால் கொடுப்பார்கள். இதுபோன்ற பிரச்சனையுடையவர்கள், மல்லிகைப் பூக்களை மார்பகங்களில் குறைந்தது 3 நாட்கள் கட்டிக்கொண்டு வந்தால், பால் சுரப்பு நின்றுவிடும் என்று சொல்லுவார்கள்.
மனதை மயக்கும் நறுமணம் மட்டுமல்ல; பல மருத்துவ குணங்களும் கொண்டதுதான் மல்லிகை.
சில மல்லிகைப் பூக்களைக் கசக்கி, இரண்டு சொட்டுகள் கண்ணில் விட்டு வந்தால், கண் பூக்களே மாறத்தொடங்குமாம்.
உடம்பில் எதேனும் கட்டிகள் வந்தால், மல்லிகைப் பூவை அரைத்து பற்றுப் போடுங்கள். கட்டி கரைந்து விடுமாம்.
பொதுவாக பெண்களூக்கு அடிக்கடி தலைவலி வருவதுண்டு. மல்லிகையை தலையில் சூடிக்கொள்ளூம் பழக்கத்தை வழக்கமாக்கிக் கொண்டால், தலைவலி வரும் வாய்ப்பு மிகக் குறைவு. தலையணையடியில் மல்லிகையைப் பரப்பி படுத்தாலும், தலைவலி குணமாகும்.
மல்லிகையைக் கொண்டு எடுக்கப்படும் தைலத்தைத் தலையில் தேய்த்துக் குளித்தால், உடம்பின் உஷ்ணம் குறைந்து குளிர்ச்சியடையும்.
மல்லிகைப்பூ எண்ணையைத் தொடர்ந்து தேய்த்துவரின், கண் எரிச்சல் நீங்குமாம்.
- படித்ததும், பாட்டி சொன்னதும்
Posted by "உழவன்" "Uzhavan" at 4/25/2008 09:10:00 PM 2 comments
Labels: தமிழ் மருத்துவம்
Saturday, April 12, 2008
அன்னாசி மருத்துவம்
Posted by "உழவன்" "Uzhavan" at 4/12/2008 08:51:00 AM 0 comments
Labels: தமிழ் மருத்துவம்
Friday, April 11, 2008
குண்டு உடல் இளைக்கவேண்டுமா?
Posted by "உழவன்" "Uzhavan" at 4/11/2008 08:33:00 AM 0 comments
Labels: தமிழ் மருத்துவம்
Thursday, April 10, 2008
தமிழ் மருத்துவம் - ஆப்பிள்
Posted by "உழவன்" "Uzhavan" at 4/10/2008 08:05:00 AM 1 comments
Labels: தமிழ் மருத்துவம்
