ஈழதேசமே...
எங்களின்
தேர்தல் போதைக்கு
இன்று
நீங்கள்தான்
ஊறுகாய்!
வேறு வழியில்லை
எங்களை
மன்னித்துவிடுங்கள்!
கொள்கை பேசும் மக்களே...
நாற்பது பணம் காய்க்கும்
மரங்களுக்காக
நாயாய் பேயாய்
அடித்துக்கொள்ளாமல்
வேறென்ன செய்வது?
எங்களை
மன்னித்துவிடுங்கள்!
கொடி பிடிக்கும் தொண்டர்களே...
நேற்று கைகுலுக்கியவரை
இன்று கைகழுவவும்
இன்று கைகுலுக்கியவரை
நாளை கைகழுவவும்
பழகிக் கொள்ளுங்கள்.
குறைந்தது
இரண்டு மாதத்திற்காவது
சோற்றில் உப்பு சேர்க்காதீர்கள்.
இப்படிப்பட்டகொள்கைகளுக்காக
எங்களை
மன்னித்துவிடுங்கள்!
மன்னியுங்கள் மக்களே
மன்னியுங்கள்!
உங்கள் வறுமைதான்
எங்கள் முதலீடு.
இலவசங்களுக்கும்
மானியங்களுக்கும்
விலை போகாமலா போவீர்கள்?
நீங்கள் காரித்துப்புவது
எங்கள் கண்களுக்குத் தெரியாமலில்லை.
அதிகாரத்துடன்
கொள்ளையடிக்க
நீங்கள் அனுமதி தரும்போது
இதைக்கூட
பொறுத்துக் கொள்ளமாட்டோமா!
மே 13
உங்கள் தலையெழுத்தை
மன்னிக்கவேண்டும்
எங்கள் தலையெழுத்தை
நிர்ணயிக்கப்போகும் நாள்!
வாக்களிக்க மறவாதீர்
எனக்கில்லையாயினும்
எவனுக்காவது ஒருவனுக்கு.
ஏனெனில்
நாளை
நானும் அவனும் கூட
கூட்டணி அமைக்கலாம்!
உழவன்
நன்றி: விகடன் தேர்தல் களம் 2009
எங்களின்
தேர்தல் போதைக்கு
இன்று
நீங்கள்தான்
ஊறுகாய்!
வேறு வழியில்லை
எங்களை
மன்னித்துவிடுங்கள்!
கொள்கை பேசும் மக்களே...
நாற்பது பணம் காய்க்கும்
மரங்களுக்காக
நாயாய் பேயாய்
அடித்துக்கொள்ளாமல்
வேறென்ன செய்வது?
எங்களை
மன்னித்துவிடுங்கள்!
கொடி பிடிக்கும் தொண்டர்களே...
நேற்று கைகுலுக்கியவரை
இன்று கைகழுவவும்
இன்று கைகுலுக்கியவரை
நாளை கைகழுவவும்
பழகிக் கொள்ளுங்கள்.
குறைந்தது
இரண்டு மாதத்திற்காவது
சோற்றில் உப்பு சேர்க்காதீர்கள்.
இப்படிப்பட்டகொள்கைகளுக்காக
எங்களை
மன்னித்துவிடுங்கள்!
மன்னியுங்கள் மக்களே
மன்னியுங்கள்!
உங்கள் வறுமைதான்
எங்கள் முதலீடு.
இலவசங்களுக்கும்
மானியங்களுக்கும்
விலை போகாமலா போவீர்கள்?
நீங்கள் காரித்துப்புவது
எங்கள் கண்களுக்குத் தெரியாமலில்லை.
அதிகாரத்துடன்
கொள்ளையடிக்க
நீங்கள் அனுமதி தரும்போது
இதைக்கூட
பொறுத்துக் கொள்ளமாட்டோமா!
மே 13
உங்கள் தலையெழுத்தை
மன்னிக்கவேண்டும்
எங்கள் தலையெழுத்தை
நிர்ணயிக்கப்போகும் நாள்!
வாக்களிக்க மறவாதீர்
எனக்கில்லையாயினும்
எவனுக்காவது ஒருவனுக்கு.
ஏனெனில்
நாளை
நானும் அவனும் கூட
கூட்டணி அமைக்கலாம்!
உழவன்
நன்றி: விகடன் தேர்தல் களம் 2009
4 comments:
In one word,'SUPERB',Uzavan.
@ஷண்முகப்ரியன்
In one word,'SUPERB',Uzavan. //
உங்களின் இந்த பாராட்டு மிக்க மகிழ்ச்சியையும், ஊக்கத்தையும் அளிக்கிறது. மிக்க நன்றி. என்னுடைய இன்னொரு தளத்தையும் http://tamiluzhavan.blogspot.com தாங்கள் பார்வையிட்டு, தங்கள் கருத்துக்களைத் தந்தால் நன்றாக இருக்கும்.
அன்புடன்
உழவன்
நல்ல கட்டுரை
கொடி பிடிக்கும் தொண்டர்களே...
நேற்று கைகுலுக்கியவரை
இன்று கைகழுவவும்
இன்று கைகுலுக்கியவரை
நாளை கைகழுவவும்
பழகிக் கொள்ளுங்கள்.
குறைந்தது
இரண்டு மாதத்திற்காவது
சோற்றில் உப்பு சேர்க்காதீர்கள்.
இப்படிப்பட்டகொள்கைகளுக்காக
எங்களை
மன்னித்துவிடுங்கள்!
அடி நல்ல அடி உச்சி அடி!...
ஆகா..குற்றவாளிகளே தன்
குற்றங்களை ஒப்புக்கொள்வதுபோல்
எதிர்முனையில் நின்று நீதிக்குக்
குடைபிடிக்கும் தங்களின் கவிதைவரிகள்
அருமையிலும் அருமை ஐயா!...
தலைவணங்குகின்றேன் தங்கள்
கவிதைக்கு......
Post a Comment