ஆடையில்லாமல் ஆபாசமாய்க் காட்சியளிக்கும் ஆண்/பெண் படங்களைக் கொண்ட சுவரொட்டிகள் மற்றும் பத்திரிக்கைகளின் பக்கங்களில், கருப்பு வண்ணம் பூசி ஆபாசப் பகுதிகளை மறைத்திருப்பார்கள். இது பொது நலன் கருதியா, இல்லை இப்படித்தான் இருக்கவேண்டுமென சட்டமே இருக்கிறதா என தெரியவில்லை.
ஆடையணிவதில் யாருக்கும் சட்டப்படி எந்த வரைமுறையும் கிடையாது. முதலமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியில், நடிகை ஸ்ரேயா முகம் சுழிக்கக் கூடிய வகையில் ஆடையணிந்து வந்ததால், அவரை மற்றவர்கள் கண்டிக்கும் நிலை உருவாகி, பின்னர் கடிதம் மூலம் முதலமைச்சரிடம் மன்னிப்பும் கேட்டார் என்ற செய்தியையும் நாம் அறிந்துள்ளோம்.
ஆடையின் வடிவமைப்புகள் தனிப்பட்ட மனிதனின் உரிமை என்கிற காரணத்தினால், பெரும் நகரங்களில் வசிக்கும் சில மேனாமினிக்கி குடும்பத்தைச் சார்ந்த பெண்கள் படு கவர்ச்சியாக ஆடையணிவதைப் பார்க்க முடிகிறது. இது சரியா தவறா என்று சொல்வது இப்பதிவின் நோக்கமல்ல. அது அவரவர் விருப்பம். ஆனால் உடம்பின் சில பாகங்களில், ஆபாசமாக நீங்கள் வரைந்து வைத்திருக்கும் ஓவியங்கள், இயல்பாகச் செல்வோரின் கண்களில்கூட படுமளவிற்கு உங்களின் ஆடையமைப்பு இருப்பின், அதைக் கண்டிக்கும் பொறுப்பு எல்லோருக்குமே உண்டு எனலாம்.
சமீபத்தில் ஒரு தனியார் நிறுவனம் நடத்திய விழாவில் கலந்து கொண்ட பாடகி நேகா பாசின், தன்னுடைய கையிலும், காலிலும் வரைந்திருந்த கவர்ச்சிகரமான பெண்ணின் ஓவியங்கள் எல்லோர் கண்களிலும் படும்படியாக ஆடையணிந்திருக்கிறார். உடம்பிலுள்ள ஆபாச ஓவியங்கள் தெரியுமளவிற்கு வீட்டினுள் ஆடையணிந்து கொள்ளலாம். வீட்டைவிட்டு வெளியே வந்தால், இப்படிப்பட்ட ஆபாச ஓவியங்கள் வெளியே தெரியாத அளவிற்கு ஆடையணிந்துதான் வரவேண்டும். இல்லையேல் அப்படிப்பட்ட ஓவியங்களை அழித்துவிட்டு வாருங்கள்.
எல்லோரும் பார்க்கும் படியாக நிர்வாணப் படங்களை கையிலே தாங்கியவாறு பொது இடங்களில் நிற்பது சரியான செயலா? காவல்துறை நடவடிக்கை எடுக்குமல்லவா! அதுபோல்தானே இதுவும். சம்பந்தப்பட்ட விழாக் குழுவினர் பாடகி நேகா பாசினைக் கண்டித்தார்களா இல்லையா எனத் தெரியவில்லை.
சமூகப் பொறுப்பு ஒவ்வொருவருக்கும் இருக்கவேண்டும். அதிலும் பிரபலங்களுக்கு இன்னும் கூடுதலாகவே இருக்க வேண்டும். சராசரி பொதுமக்களும் எப்போது கேள்வி கேட்கிறோமோ அப்போதுதான், தனக்கே இது தவறு என்று தெரியாமல் இருப்பவர்களுக்குகூட தெரியவரும். நேகா பாசின் இதைச் தெரிந்து செய்தாரோ? இல்லை தெரியாமல் செய்தாரோ? சம்பந்தப்பட்டவர்கள் அவருக்கு எடுத்துரைப்பீராக!
நன்றி: தினத்தந்தி
உழவன்
Tuesday, April 28, 2009
நேகா பாசினின் நிர்வாணப் படம்
Posted by "உழவன்" "Uzhavan" at 4/28/2009 07:17:00 AM
Labels: சமூகம்
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
//இப்படிப்பட்ட ஆபாச ஓவியங்கள் வெளியே தெரியாத அளவிற்கு ஆடையணிந்துதான் வரவேண்டும். இல்லையேல் அப்படிப்பட்ட ஓவியங்களை அழித்துவிட்டு வாருங்கள்.//
ஓவியம் வரைந்ததே மற்றவர்கள் பார்க்க வேண்டும் என்பதற்குத்தானே..
இந்த ஜென்மங்கள் எப்பொழுதும் திருந்தாது.. எதிர்ப்பு வழுக்கும் போது, ஒரு மன்னிப்பு கடிதம் (அறிக்கை) மீடியாக்களுக்கு அனுப்பப்படும்.. அவ்வளவே..
@லோகு
தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி. தொடர்ந்து வாரீர் நண்பரே..
Post a Comment