Wednesday, April 22, 2009
தந்தியும் கலைஞரும்
குளத்தில் விழுந்த எறும்பைக் காப்பாற்ற இலையைக் கிள்ளிப் போடலாம். ஆனால் குளத்தில் விழுந்த குழந்தையைக் காப்பாற்ற இலையைக் கிள்ளிப் போடுவார்களா? இலங்கைத் தமிழருக்காக கலைஞர் அவர்களின் தந்தி கொடுக்கும் கண்துடைப்பானது, குழந்தையைக் காப்பாற்ற இலையைக் கிள்ளிப் போடுவது போலத்தான் இருக்கிறது.
குடியரசுத் தலைவருக்கோ, பிரதமருக்கோ எந்த ஒரு இந்தியக் குடிமகனாலும் தந்தி கொடுக்க முடியும். இப்படி ஒரு சாதாரண மனிதனால் செய்ய முடிந்ததைச் செய்வதற்காகவா ஒரு முதலைச்சர். அதுவும் எத்தனை முறைதான் தந்தி கொடுப்பாரோ! இதற்காகவா நாற்பதையும் மக்கள் அள்ளித்தந்தார்கள்? அவருக்கு இருக்கின்ற அதிகாரத்திற்கு எவ்வளவோ செய்திருக்கலாமே.
சோனியாஜி அவர்கள் இந்தத் தந்தியைப் பார்த்தவுடன், ஐயோ.. கலைஞர் அவர்கள் தந்தி கொடுத்திருக்கிறார்; உடனடியாக நாம் போரை நிறுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், கோபத்தில் ஏதாவது விபரீதமாக முடிவெடுத்துவிடுவார்; அப்படி எடுத்துவிட்டால், நம் ஆட்சி, பதவி என்று அத்தனையும் ஒட்டு மொத்தமாகப் போய்விடுவதோடு, அடுத்த முறையும் ஆட்சியமைக்க முடியாமல் போய்விடும் என்றெல்லாம் நினைத்து, பயந்து போய் உடனடியாக போர் நிறுத்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு விடுவாரா என்ன? இப்படி நாம் நினைத்தால் நாம் தான் முட்டாள்கள்.
காங்கிரஸ்காரர்களுக்கு நன்றாகவே தெரியும். இன்னும் சுமார் ஒருமாதகால பதவி இருக்கும்போது, அதை எப்படி கலைஞர் இழக்க முன்வருவார் என்று.
தமிழர்களே.. நம் தமிழனத் தலைவர் அவர்கள், தந்திக்குப் பதிலாக, ஒரு அஞ்சல் அட்டையில் கடிதம் எழுதி, அதை அறிவாலயத்தின் அருகிலுள்ள தபால்பெட்டியில் போடாமல் இருந்தாரே, அதற்காக ஒருவகையில் சந்தோசப்பட்டுக் கொள்வோம்.
இதுமட்டுமல்லாது நாளை வேலை நிறுத்தத்திற்கு அழைப்பும் விடுத்திருக்கிறார். இது யாரை ஏமாற்றுவதற்காக? யாரை எதிர்த்து இந்த வேலை நிறுத்தம்? மத்திய அரசைக் கண்டித்தா? உங்கள் கூட்டணியிலிருக்கும் சோனியாஜியைக் கண்டித்தா? இல்லை இலங்கை அரசைக் கண்டித்தா?
சாதாரண பேருந்து பயணத்திற்கே 30 நாட்களுக்கு முன்னரே முன்பதிவு செய்யப்படுகிறது. ரயில் பயணத்திற்கு 90 நாட்கள். இவ்வளவு ஏன்.. ஒரு சினிமாவுக்குச் செல்லக்கூட மூன்று நான்கு நாட்களுக்கு முன்னரே முன்பதிவு செய்தால்தான் செல்லமுடியும். இப்படி திட்டமிடலோடு வாழ்க்கை நடத்தி வரும் மக்களிடம், திடீரென நாளை நீ எங்கும் செல்லாதே, எதுவும் செய்யாதே என்றால் எப்படி?
திடீரென இப்படி எதாவது போராட்டங்களை அறிவிக்கும் கழகத் தலைவர்களே.. உங்களுக்கு போராடவேண்டும் என்ற உணர்வு திடீரென வந்தால், ஒரு ஓரமாகச் சென்று உண்ணா விரதம் இருங்கள்; கூட்டம் போடுங்கள்; குட்டிக் கரணம் போடுங்கள்; தண்ணீர் குடியாமல் இருங்கள்; தந்தி அடியுங்கள். ஆனால் பொது மக்களையும் இது போன்ற பொதுக்காரணங்களுக்காக போராட்டங்களில் ஈடுபடுத்த வேண்டும் என்று நினைத்தால், அதற்கு தகுந்த கால அவகாசம் கொடுங்கள்.
இக்கட்டுரை விகடன் தேர்தல் களம் 2009 ல் இடம்பெற்றுள்ளது.
உழவன்
Posted by "உழவன்" "Uzhavan" at 4/22/2009 10:57:00 AM
Labels: தேர்தல்
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
வரும் தேர்தலில் யாரும் திமுக கூட்டனிக்கு ஓட்டு அளிக்க வேண்டாம் !!!
நல்லா சொன்னீங்க...
karunanithiyin kadaisi muyarchi idu, ippodum avarukku oru arumaiyana vaippu irukkiradu, avar congress udan kootaniyai udarivittu makkalai thaniyaga santhithal atleast he will get few seats otherwise 40 immmm... govinda.govinda. now he dont have majority in assembly so sure he has to go home if he come out from congress-alliance. but after that when go for vote with the people he can get majority.......... And it will be a lesson for congress also..... Anyhow it will be a big drawback for congress, they can't form any govt at centre when they 0/40 from TN.
Very good.expose yourself in high manner.Every citizan's are resabmled with your view.I too.He had embroiled with his policies and conflict with local.then how can survive?Leave it.Age is the defect.
@அசோக்குமார், நையாண்டி நைனா, jeevaflora
வருகைக்கும், கருத்துகளுக்கும் மிக்க நன்றி :-)
very very nice Uzavan
well said uzhavan
@அமிர்தவர்ஷினி அம்மா
well said uzhavan//
வாங்க மேடம். நல்லா இருக்கீங்களா? கொஞ்ச நாளா உங்கள பார்க்கமுடியல.
ரொம்ப நன்றி.
Post a Comment