Thursday, February 12, 2009

பதினாறு பேறுகள் எவையெவை?

"பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க" என் வாழ்த்துவது நம் மரபு. இதற்கு பதினாறு மக்கட் செல்வம் பெற்று பெருவாழ்வு வாழ்க என பொருள் கொள்வோரும் உண்டு. பதினாறு பிள்ளைகளைப் பெற்ற பின்பு எப்படி பெருவாழ்வு வாழ்வது. அரசன் கூட ஆண்டி ஆகிவிடுவான்.
 
ஒருவன் வாழ்வில் பெறவேண்டிய பதினாறு செல்வங்கள் எவையென்பதை,
 
"துதி வாணி வீரம் விசயம் சந்தானம் துணிவு தனம்
அதிதானியம் செளபாக்கியம் போகம் அறிவு அழகு
புதிதாம் பெருமை அறம்குலம் நோயின்மை பூண்வயது
பதினாறு பேறும் தருவாய் மதுரைப் பராபரனே"
 
என்ற காளமேகப்புலவரின் பாடல் நமக்குப் புலப்படுத்துகிறது.
 
புகழ், கல்வி, வெற்றி, மக்கட்பேறு, துணிவு, செல்வம், மிகுந்த தானியம், சுகம், இன்பம், அறிவு, அழகு, புதிதுபுதிதாக ஏற்படக்கூடிய சிறப்புக்கள், அறவுணர்வுடைய குடிப்பிறப்பு, நோயற்ற வாழ்வு, நீண்ட வயது ஆகியவைகளே பதினாறு பேறுகள் ஆகும். இருந்தாலும் இவற்றினுள் சிறந்த பேறாகக் கருதப்படுவது மக்கட்பேறாகும்.
எனவேதான் வள்ளுவரும்,
 
"பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த
மக்கட் பேறல்ல பிற"
 
என்பார்.

4 comments:

Anonymous said...

of course some people do not abt. what are the 16 selvangal..
vilakkam good. bask

world citizen said...

excellent poem
blogger avarkal vazhga valamudan

Anonymous said...

பதினாறாவது....?

இரவிச்சந்திரன், பெஙகளூர்

Anonymous said...

1) புகழ்,
2) கல்வி,
3) வீரம்,
4) வெற்றி,
5) மக்கட்பேறு,
6) துணிவு,
7) செல்வம்,
8) மிகுந்த தானியம்,
9) சுகம்,
10) இன்பம்,
11) அறிவு,
12) அழகு,
13) புதிதுபுதிதாக ஏற்படக்கூடிய சிறப்புக்கள்,
14) அறவுணர்வுடைய குடிப்பிறப்பு,
15) நோயற்ற வாழ்வு,
16) நீண்ட வயது
பதினாறு பேறுகளின் பாடலைப் பகிர்ந்தமைக்கு நன்றி.