Thursday, February 12, 2009

எந்நாளும் அழியா "பொன்மொழிகள்"

21. மரணத்தைப் பற்றிக் கவலைப்படாதே. நீ இருக்கும்வரை அது வரப்போவதில்லை. அது வரும்போது நீ இருக்கப் போவதில்லை! - விவேகானந்தர்
 
22. உலகம் உன்னை அறிவதைவிட, உன்னை உலகிற்கு அறிமுகம் செய்துகொள்! - அப்துல்கலாம்
 
23. தடம் பார்த்து நடப்பவன் மனிதன். தடம் பதித்து நடப்பவன் மாமனிதன்! -பிடல் காஸ்ட்ரோ
 
24. நீ வெளிச்சத்தில் சென்றால் உலகமே உன்னைப் பின்தொடரும். ஆனால் நீ இருட்டினில் சென்றால் உன் நிழல் கூட உன்னைப் பின்தொடராது. - ஹிட்லர்
 
25. நம்மை வெல்ல யாரும் இங்கு பிறக்கவில்லை என்பது பொய். மற்றவரை வெல்ல நாம் இங்கு பிறந்திருக்கிறோம் என்பதே உண்மை!
 
26. முடிவெடு. அதை நீ முடித்துவிடு!
 
27. கோபம் என்பது பிறர் செய்யும் தவறுக்கு, உனக்கு நீயே கொடுத்துக்கொள்ளும் தண்டனை! - புத்தர்
 
28. நண்பன் சிறந்தவனாக இருக்கவேண்டும் என்று எண்ணாதே. அவன் சிறந்தவனாக இருக்க நீ உதவிகரமாக இரு! - தெரசா
 
29. வெற்றி என்பது உன் நிழல் போல. நீ அதைத் தேடிப்போகவேண்டியதில்லை. நீ வெளிச்சத்தை நோக்கி நடக்கும்போது, அது உன்னுடன் வரும்! -அப்துல்கலாம்
 
30. கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே. உன்னைக் கொன்றுவிடும். கண்ணைத் திறந்து பார்; காணாமல் போய்விடும்! - அப்துல்கலாம்

3 comments:

Anonymous said...

Sir, really PONMOZHIKAL thaan

1st one is the very fact.. then 27 every one shd. know it..

28. also.. a person who always finding fault with his friend shd. read it..
good information..
Bask

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

கடலுக்க போட்டாலும் கட்டுமரமாவேன்...கலைஞர் தொ.காவில் (தொல்லைக் காட்சி என நீங்கள் நினைத்தால் ;நான் பொறுப்பல்ல) அது என்ன?? மொழியுங்க..
இப்போ சில பிரபலங்கள் கொட்டாவி விட்டாலும் பொன் மொழியாம்...
உங்கள் தொகுப்பை மிக ரசித்தேன். சிறந்தவை.

Unknown said...

Mikka nandru. En eneya valthukkal neegal ungalin ennam pol valara