Monday, February 9, 2009

சென்னை கிரிக்கெட்

ஆட்டம் பரபரப்பாகவும்
விறுவிறுப்பாகவும்
போய்க்கொண்டிருந்தது
 
பவுண்டரியில் பீல்டிங்
செய்த நான்
பறந்து வந்த பந்தை
வேகமாய் ஓடிச்சென்று பிடித்துவிட்டு
விக்கெட் விழுந்த
மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தேன்
 
என்னைப் போலவே
எனதருகில் நின்று
பீல்டிங் செய்த ஒருவர்
"பாஸ்.. அது எங்க பால்"
என்றபோதுதான்
எனக்குப் புரிந்தது
அவன் பிடிக்க வேண்டிய பந்தை
நான் பிடித்து
அவர்களுக்கு
பீல்டிங் செய்துள்ளேன் என்று !
 
தீப்பெட்டிக்குள்
அடைக்கப்பட்ட குச்சிகள் போன்று
இருந்த மைதானத்தைப் பார்த்தபோது
 
மிளகாய் மாரு பிடுங்கப்பட்ட
பல ஏக்கர் பொட்டல்காட்டில்
பதினோரு பேரு கூட இல்லாமல்
கிரிக்கெட் ஆடிய
அந்த நினைவுகள்
சச்சின் அடித்த பவுண்டரியாய்
விர்ரென்று ஒரு விநாடி வந்து போனது !
 

4 comments:

நாமக்கல் சிபி said...

நன்று!

தமிழ் said...

வாழ்த்துகள் நண்பரே

" Word Verification "
கொஞ்சம் தூக்கி விடுங்கள்

PNA Prasanna said...

உங்கள் தளம் சிறக்க வாழ்த்துக்கள்.

http://pnaptamil.blogspot.com
http://pnaprasanna.blogspot.com

குப்பன்.யாஹூ said...

இலங்கைல தமிழ் மக்கள் கொள்ளப் படும் பொது எப்படித்தான் கிரிக்கெட் பற்றி பதிவு எழுத மனம் வருகிறதோ.

நெஞ்சு பொறுக்குதில்லையே


குப்பன்_யாஹூ