சொட்டை மண்டையில் முடி முளைக்க:
உப்பை நன்றாக தூள் செய்து தினசரி 3 அல்லது 4 வேளை தேய்த்து வர மயிர் முளைக்கும்.
முள் குத்தின வலிக்கு:
உப்பு, மிளகு சரி எடை எடுத்து நல்லெண்ணெயில் வதக்கிக் கொண்டு ஒத்தடம் தந்தால் இதம் தெரியும்.
நகச்சுற்று மறைய:
உப்பு, வெங்காயம், சுடுசோறு இம்மூன்றையும் சம அளவு அரைத்து கட்ட நகச்சுற்று குணமாகும்.
காதில் எறும்பு அல்லது சிறுபூச்சி புகுந்துவிட்டால்:
கொஞ்சம் உப்பை நீரில் கரைத்து காதில் விட்டால் எந்த பூச்சியும் வெளியேறும்.
விஷக்கடிக்கு:
குளவி, சிலந்தி போன்ற விஷப்பூச்சிகள் கொட்டினால், கடித்தால் உப்பைக் கொஞ்சம் தண்ணீரில் போட்டு, கெட்டியாகக் கரைத்து, கடி வாயில் தடவினால் குணமாகும். சர்க்கரைத் தண்ணீரில் சில துளி உப்புத் தண்ணீர் விட்டு குடிப்பதும் நல்லது.
உப்பின் பிற பயன்கள்:
* நெய்யில் ஒரு தேக்கரண்டி உப்பைப் போட்டு சுடவைத்தால் நெய் நீண்ட நாள் கெடாமல் இருக்கும்.
* மண்ணெண்ணெயில் சிறிது உப்பு கலந்து விளக்கேற்றினால் மண்ணெண்ணெய் சீக்கிரம் தீராது.
* அரிசியை நீண்ட நாட்கள் சேமித்து வைக்கும்போது சிறிது உப்புத் தூளையும் கலந்துவிட்டால் புழு, பூச்சி வராமல் பாதுகாப்பாக இருக்கும்.
* துருப்பிடித்த சாமான்கள் மீது உப்பு தேய்ப்பின் துரு நீங்கி பளபளக்கும்.
* வீட்டில் தரை கழுவும்போது, சிறிது உப்பையும் நீரில் கலந்து கழுவினால், காய்ந்த பிறகு தரையில் ஈக்கள் மொய்க்கும் தொல்லையிராது.
இதுமட்டுமல்ல .. உப்பிட்டவரை உள்ளளவும் நினைக்கனுமாம் !
- தமிழ் மருத்துவம் நூலிலிருந்து
3 comments:
கொஞ்சம் சம்பந்தப்பட்ட பதிவு
http://www.saravanakumaran.com/2009/02/blog-post.html
உப்பு அதிகம் சாப்பிட்டால் இரத்தக் கொதிப்பு வரும் தெரியுமா :-))
Vuppu theithal sottai maraiyumaa
is it..
Post a Comment