Wednesday, January 28, 2009

மின்சாரம் பெற இனி 'ரீ-சார்ஜ் கூப்பன்'

வீடுகளுக்கு வழங்கப்படும் மின்சாரத்தை பெற இனி "ரீ-சார்ஜ் கார்டு' வாங்கி தேவையான அளவு உபயோகித்து கொள்ளும் முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.வீடு, அலுவலகங்களுக்கு பயன்படுத்தப்படும் மின்சார அளவை கணக்கிட்டு மின் வாரியத்தில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தற்போது சென்னையில் மட்டும் மின் கட்டணத்தை இன்டர்நெட்டில் செலுத்தும் முறை உள்ளது. அலைச்சல், நேரம் மிச்சமாவதால் சென்னையில் இதற்கு பெரும் வரவேற்பு உள்ளது.  

இதனையடுத்து மின் வாரியம் சாப்ட்வேர் கம்பெனிகளின் உதவியுடன் ரீ-சார்ஜ் முறையில் மின்சாரத்தை வழங்கும் புதிய திட்டத்தை அறிமுகம் செய்யவுள்ளது. இதற்காக பெங்களூருவில் உள்ள சாப்ட்வேர் கம்பெனியில் மொபைல் போன்களுக்கு டாப்-அப் கார்டு மூலம் பேசுவது போல மின்சாரத்தை பயன்படுத்தும் பொதுமக்கள், மின் இணைப்பு பெற்றுக்கொண்டு மாதாமாதம் தங்களுக்கு தேவையான மின்சாரத்தை டாப்- அப் கார்டுகள் மூலம் ஸ்கிராட்ச் செய்து உயயோகப்படுத்தும் வகையில் புதிய சாப்ட்வேர் உருவாக்கப்பட்டுள்ளது.  

இதில் தற்போதுள்ள மீட்டரை மாற்றி சாதாரண பொதுமக்கள் வாங்கும் விலையில் புதிய மீட்டரை உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகள் நிறைவு பெற்ற பின் சென்னை போன்ற பெருநகரங்களில் அறிமுகம் செய்யப்படும். இந்த ரீசார்ஜ் கூப்பன்களை அரசின் அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களில் பெற்று தேவையான அளவு மின்சாரத்தை பயன் படுத்திக்கொள்ளலாம். இது குறித்து மின்வாரிய உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது 

இந்த புதிய முறை நடைமுறைப்படுத்தும் போது பொதுமக்கள் அதிகம் பயன் அடை வார்கள். வீடு, அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் மின் அளவு வெகுவாக குறையும். இந்த புதிய முறை பெரிய கனரக தொழிற்சாலைகளுக்கு பயன் படுத்துவதில் சிரமம் ஏற்படும் . இது நடைமுறைக்கு வர ஒரு ஆண்டு ஆகலாம்' என்றார்.
 
- செய்தி

0 comments: