Thursday, January 22, 2009

இசை மருத்துவம் - இசை கேளுங்கள் ! இன்பமாய் வாழுங்கள் !

நரம்பு மண்டலத்தைச் சீர்படுத்துவதில் இசையின் மருத்துவகுணம் மகத்தானது. எல்லா உணர்வுகளையும் தூண்டவும் அதே நேரத்தில் அமுக்கவும் அதற்குரிய இசை உண்டு.
 
நரம்பு சம்பந்தமான கோளாறுகள், நரம்புத் தளர்ச்சி, சோகமான நிகழ்வால் ஏற்படும் அதிர்ச்சிகள்  இவற்றைப் போக்கடிக்க, இதற்கென உண்டான இசையைக் கேட்டாலே பலன் தெரியும்.
 
இசை மருத்துவச் சிகிச்சையென்பது, நோயாளியே இசைக்கருவியை இயக்குதல் அல்லது பாடுதலாகும். இது முடியாதவர்கள்தான் இசையைக் கேட்டு ரசித்து மகிழவேண்டும்.
 
அமெரிக்காவில் ஒரு பல் மருத்துவர், மயக்க மருந்தோ அல்லது வலிக்குறைப்பு மருந்தோ இல்லாமல், இசையை எழுப்பியே நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு சிகிச்சையளித்துள்ளார் என்று ஒரு செய்தி உள்ளது.
 
ஹிஸ்டீரியா என்ற நோயை நரம்புக் கருவிகளின் இன்னிசை விரட்டிவிடும் என்ற நம்பிக்கையும் உள்ளது.
 
ஒரு நபர் மட்டுமே மீட்டுகின்ற வயலின் இசையைக் கேட்டாலே, கொடிய தலைவலியும் ஓடோடிவிடுமாம்.
 
பாஸ்டனில் இசையைக் கொண்டு, சுகப்பிரசவம், இதய அறுவைச் சிகிச்சை போன்றவைகள் நடைபெறுவதாக படித்த ஞாபகம் உண்டு.
 
உடலுக்கும், மனதிற்கும் வருகின்ற எந்த நோயையும் குணப்படுத்தும் ஆற்றல் இசைக்கு உண்டு.
 
இசை கேளுங்கள் ! இன்பமாய் வாழுங்கள் !
 
- படித்ததும், பாட்டி சொன்னதும்

0 comments: