என் அம்மாவுக்கும்
உன் அம்மாவுக்கும்
தெருமுனையில்
குழாயடிச் சண்டை
வழக்கம்போல் நீ
வருவாயோ மாட்டாயோ
என நான்
நினைத்திருந்தபோது,
வழக்கம்போல்
வாசலில் சைக்கிளோடு
வந்து நின்றாய்
என்னைப் பள்ளிக்கு
அழைத்துச் செல்ல!
குடும்பப் பிரச்சனையில் கூட
நைந்து போகாததுதான்
நட்பு என உணர்த்தினாய் நீ!
0 comments:
Post a Comment