புதுச்சேரி: தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாமக சேருவதாக வரும் செய்திகள் தவறானவை, வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் திமுக கூட்டணியிலேயே தொடர்வோம் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இன்று புதுச்சேரி வந்த ராமதாஸ் நிருபர்களிடம் பேசுகையி்ல்.வரும் நாடாளுமன்றத் தேர்தலில் புதுவை தொகுதியை பா.ம.கவுக்கு விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று உங்கள் கூட்டணி கட்சி தலைவர்கள் சொல்கிறார்களே?ராமதாஸ்: புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளர் ஜானகிராமனைத்தானே சொல்கிறீர்கள். அவர் அப்படிப்பட்டவர் இல்லை. யாரோ சிலரின் நிர்ப்பந்தத்தின் பேரில்தான் அவர் அப்படி சொல்லி இருக்கிறார். அரசியல் கட்சி தலைவர்கள் இப்படி சொல்வது வழக்கம்தானே.
சொல்லப் போனால் பாமக எம்பி பேராசிரியர் ராமதாசின் சிறந்த சேவையை பாராட்டும் வகையில் அரசியல் கட்சிகள் அனைத்தும், மக்களும் அவரை போட்டியின்றி தேர்ந்தெடுக்க வேண்டும்.
கேள்வி: நீங்கள் அரசை குறி வைத்து தாக்குவதாக தமிழக முதல்வர் கருணாநிதி சொல்கிறாரே?
ராமதாஸ்: கலைஞர் இதற்கு முன்னால் நான் சொல்லும் கருத்துக்களை ஆக்கப்பூர்வமான விமர்சனம் என்று சொல்லி வந்தார். சமீபத்தில் தமிழக அரசு தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்று நான் சொன்ன பிறகுதான் என் மீது அவர் கோபமாக உள்ளார்.
கேள்வி: திமுக கூட்டணியில் இருந்து வெளியேற முயற்சி நடக்கிறதா?ராமதாஸ்: ஏற்கனவே இதுபற்றி பலமுறை சொல்லி இருக்கிறேன். நேற்றும் சொன்னேன். நேற்று முன் தினமும் சொன்னேன். அதைப்பற்றி அவர்தான் (கருணாநிதி) முடிவெடுக்க வேண்டும். கொடுத்த வாக்குறுதிப்படி 2011ம் ஆண்டு வரை எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் திமுக அரசுக்கு ஆதரவு கொடுப்பார்கள். வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் இதே கூட்டணி தொடரும்.
கேள்வி: தமிழகத்தில் மெகா கூட்டணி அமைக்க முயற்சி நடப்பதாகவும், அதிமுக கூட்டணியில் பாமக சேருவதாகவும் செய்திகள் வந்துள்ளனவே?ராமதாஸ்: அது தவறான செய்தி.
கேள்வி: புதுவையில் சட்டம்- ஒழுங்கு எப்படி உள்ளது?
பதில்: இந்த மாநில அமைச்சர்களே சட்டம்-ஒழுங்கு சரியில்லை என்று கூறும்போது அதைப்பற்றி நாங்கள் என்ன சொல்வது? அதனை ஆமோதிக்க வேண்டியதுதானே என்றார்.
0 comments:
Post a Comment