தூத்துக்குடி: உப்புக்கு பெயர் போன தூத்துக்குடியில் உற்பத்தி வெகுவாக குறைந்து விட்டதால், குஜராத்திலிருந்து தூத்துக்குடிக்கு உப்பு வரும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக பிரதான தொழிலாக உப்பளத் தொழில் உள்ளது. இந்த மாவட்டத்தில் தூத்துக்குடி, வேப்பலோடை, ஆறுமுகநேரி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 20,000 ஏக்கரில் உப்பளங்கள் அமைந்துள்ளன. உற்பத்தியாளர்கள் 1000 பேர் இத்தொழிலில் உள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக உப்பு உற்பத்தியாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த மார்ச் மாதம் பெய்த தொடர் மழையால் உப்பளங்களுக்கு செய்த செலவுகள் எல்லாம் நஷ்டத்தை ஏற்படுத்தி விட்டது.இதனால் மீண்டும் உப்பளங்களை தயார் செய்ய பணவசதி இல்லாததால் பல உற்பத்தியாளர்கள் உப்பளங்களை அப்படியே போட்டு விட்டனர்.
இதனால் உப்பு வாரும் மாதமான மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மாதங்களில் உப்பு வார முடியாமல் போய்விட்டதோடு, உப்பு உற்பத்தியும் இல்லாததால் உப்பு உற்பத்தியாளர்கள் முதல் தொழிலாளர்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.தூத்துக்குடி மாவட்டத்தில் உப்பு உற்பத்தி அடியோடு குறைந்துவிட்டதால் குஜராத்தில் இருந்து ரயில் மூலம் தூத்துக்குடிக்கு அதிக அளவு உப்பு வந்து கொண்டிருக்கிறது.
Monday, June 9, 2008
துத்துக்குடிக்கே உப்பு
Posted by "உழவன்" "Uzhavan" at 6/09/2008 07:48:00 AM
Labels: செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment