Friday, May 23, 2008

மனைவியே கண்கண்ட தெய்வம்- விஜய்காந்த்

சென்னை: திருமணமான ஆண்களுக்கு மனைவியே கண்கண்ட தெய்வம் என தேமுதிக தலைவர் விஜய்காந்த் கூறினார்.தே.மு.தி.க. பிரமுகர் இல்லத் திருமணத்தை தனது மனைவி பிரேமலதாவுடன் வந்து நடத்தி வைத்து விஜய்காந்த் பேசுகையில்,தே.மு.தி.கவினர் மதங்களை கடந்து மனதால் ஒன்றுபட்டு செயல்படுவதை இந்த திருமண நிகழ்ச்சியில் காணமுடிகிறது.

ஆனால் சில அரசியல்வாதிகள் தங்கள் சுயநலத்துக்காக மதங்களை பிரித்து மக்களுக்குள் சண்டையை மூட்டுகிறார்கள்.திருமண விழாவில் அரசியல் பேசுவதை தவிர்க்கவே விரும்புகிறேன். மணமக்கள் தங்களுக்குள் விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் ஒற்றுமையாக நலமாக வாழலாம்.

எனது வளர்ச்சி பிடிக்காமல் எனக்கு ஆளுங்கட்சியினர் நிறைய தொல்லை கொடுத்து நிம்மதியை கெடுத்தார்கள். அப்போதெல்லாம் எனது மனைவியின் ஆறுதல் வார்த்தைகளாலும், அன்பான அணுகுமுறையாலும் என்னால் அரசியலில் தெளிவோடு செயல்பட முடிந்தது.

நான் கலை உலக வாழ்க்கையில் இருந்து அரசியல் உலக வாழ்க்கைக்கு வரும்போது எனது மனைவியின் அன்பான ஆதரவு, ஊக்கம் எனக்கு கைகொடுத்தது.ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னால் பெண் இருக்கிறார் என்பார்கள். அது வேறு யாரும் இல்லை மனைவிதான். என் வெற்றிக்கு பின்னால் என் மனைவி இருக்கிறார்.

கணவரே கண்கண்ட தெய்வம் என்பார்கள். திருமணமான ஆண்களுக்கு மனைவியே கண்கண்ட தெய்வம். எனவே மண மக்களாகிய நீங்கள் விட்டுக் கொடுத்து ஒத்துப் போனால் வாழ்க்கை பயணம் சுகமானதாக அமையும் என்றார்.

0 comments: