Monday, May 19, 2008

அவரை மருத்துவம்

கொடிகளில் சிறந்த அவரை, மலிவான விலையில் நிறைய ஊட்டச்சத்தினை தருவதாகும்.
 
புரதம், சுண்ணாம்புச் சத்து, இரும்பு மற்றும் விட்டமின்கள் இருக்கும் அவரையில், முற்றிய காயைவிட பிஞ்சுக்களே சிறந்தது.
 
இது மிக எளிதில் செரிமானம் ஆகக்கூடியதால், பலவீனமான குடல் உடையவர்களும் உண்ணலாம். இரவு நேரத்திலும் மற்றும் பத்திய உணவிற்கும் அவரை ஏற்றது.
 
வெண்ணிற அவரைக்காய் வாயு, பித்தம் இவற்றைக் கண்டிப்பதோடு, உள்ளுறுப்புகளின் அலர்ச்சியையும் போக்கும்; எரிச்சலையும் குறைக்கும்.
 
அவரையை அடிக்கடி உணவில் சேர்த்தால், சீதபேதி, நீரிழிவு, ஜீரணக்கோளாறு, பேதித்தொல்லை போன்ற நோய்கள் காணாமல்போக வாய்ப்புள்ளதாக தமிழ் மருத்துவம் சொல்கிறது.
 
காது வலிக்கும், தொண்டை வலிக்கும் அவரையின் சாற்றை அஸ்ஸாமில் பயன்படுத்துவதாக செய்திகள் உள்ளன.
 
இரத்தக்கொதிப்பைத் தடுக்கும் ஆற்றல் இதற்க்குண்டு என்பது அண்மைய கண்டுபிடிப்பு.
 
- படித்ததும், பாட்டி சொன்னதும்

1 comments:

Anonymous said...

Lots of wonderful info. Thanks for posting. I love this veg.

Ramya