Tuesday, May 20, 2008

ஜெ., லாலு, மாயாவதி பிரதமராவார்கள்: பத்திரிகையாளர் ஆருடம்

டெல்லி: அடுத்த 20 ஆண்டுகளில் நாட்டின் பிரதமராகும் வாய்ப்பு அத்வானியைத் தவிர ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ், உத்தரபிரதேச முதல்வர் மாயாவதி, அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா ஆகியோருக்கும் பிரகாசமாக இருப்பதாக மூத்த பத்திரிகையாளர் குமார் ராஜேஷ் எழுதியுள்ள நூலில் கூறப்பட்டுள்ளது.

டெல்லியை சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் குமார் ராஜேஷ், 'ஜனதா எனிமா 30 அவுட் ஆப் 60' என்ற நூலை எழுதி நேற்று வெளியிட்டார்.அவரது பழுத்த அரசியல் அனுபவத்தை வைத்து எழுதியுள்ள இந்த நூலில், அடுத்த 20 ஆண்டுகால அரசியலில் நாட்டின் பிரதமர் பதவியைக் கைப்பற்றக்கூடிய அதிர்ஷ்டம் யாருக்கெல்லாம் வாய்க்கக்கூடும் என்பதை ஆதாரங்களுடன் அலசி பட்டியலிட்டுள்ளார்.

எதிர்காலத்தில் மத்தியில் ஆட்சி அமைக்கக்கூடிய காங்கிரஸ் அல்லாத ஆளும்கட்சிக்கு நிச்சயம் ஒரு மாஜி காங்கிரஸ்காரர் தலைவராக இருக்க மாட்டார் என்றும் இந்த புத்தகம் ஆருடம் கூறுகிறது.

இது பற்றி நூலாசிரியர் குமார் ராஜேஷ் கூறுகையில், நமது நாட்டின் கடந்த 30 ஆண்டுகால கூட்டணி அரசியலை ஆராய்ந்து பார்த்தால், இதற்கு முந்தைய காலங்களைப் போல் அல்லாமல், எதிர்காலத்தில் மத்தியில் அமையக்கூடிய காங்கிரஸ் அல்லாத கட்சிகளின் ஆட்சியில் ஒரு மாஜி காங்கிரஸ்காரர் பிரதமராகும் வாய்ப்பு இல்லை என்று யாரும் சொல்ல முடியும்.

மத்தியில் இதுவரை ஆண்ட காங்கிரஸ் அல்லாத வேறு கட்சிகள் முழுமையாக ஐந்தாண்டுகள் ஆட்சி நடத்தியதாக சரித்திரம் இல்லை, வாஜ்பாய் தலைமையிலான கூட்டணி அரசு தவிர. இதற்குக் காரணம் அவர் காங்கிரஸ் பாரம்பரியத்தைச் சேராதவர் என்பதுதான்.

அவருக்கு அடுத்தாற்போல அத்வானியைத் தவிர அடுத்த 20 ஆண்டுகளில் பிரதமராகும் வாய்ப்பு லாலு, மாயாவதி, ஜெயலலிதாவுக்குத் தான் அதிகமாக இருக்கிறது.இந்த பட்டியல் முழுமையானது அல்ல. காங்கிரஸ் மற்றும் மாஜி காங்கிரஸ் காரர்கள் யாரையும் இதில் சேர்க்கவில்லை என்றார் குமார் ராஜேஷ்குமார்

ராஜேஷின் பட்டியலில் ஜெயலலிதா, மாயாவதி, லாலு தவிர மு.க.ஸ்டாலின், நரேந்திர மோடி, பிரகாஷ் காரத், முலாயம் சிங் யாதவ், ராஜ்நாத் சிங், அருண் ஜேட்லி, நிதீஷ்குமார், சீதாராம் யெச்சூரி, சுஷ்மா ஸ்வராஜ், ராம்விலாஸ் பஸ்வான், ஷரத் யாதவ் ஆகியோரும் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments: