உலகின் பெருமைக்குரிய திரைப்பட விழாக்களுள் ஒன்றான கேன்ஸ் விழாவில் இந்த ஆண்டும் அனைவரது கவனத்தையும் ஈர்த்து கலக்கினார் பாலிவுட் நட்சத்திரம் ஐஸ்வர்யா பச்சன்.
பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் நடைபெறும் திரைப்பட விழாவில் துவக்கநாளான நேற்று தனது காதல் கணவர் அபிஷேக் பச்சனுடன் ஜோடியாக வந்து கலந்து கொண்ட ஐஸ்வர்யா பச்சன் மீதுதான் அங்கிருந்த விஐபிகளின் கவனம் இருந்தது.
கேன்ஸ் திரைவிழாவில் கடந்த 2002ம் ஆண்டில் ஐஸ்வர்யா நடித்த சூப்பர்ஹிட் படமான தேவ்தாஸ் திரையிடப்பட்டபோது குதிரைகள் பூட்டப்பட்ட ஆடம்பரமான சாரட் வண்டியில் ஷாரூக்கானுடன் வந்திறங்கி பார்வையாளர்களை விழி விரிய வைத்தார். அப்போதிலிருந்து தொடர்ந்து கேன்ஸ் விழாவின் துவக்க நிகழ்ச்சியில் ஐஸ்வர்யாவின் பங்கேற்பு நிரந்தரமான நிகழ்ச்சி நிரலாகிவிட்டது.
ஐஸ்வர்யா இல்லாமல் திரைப்படத் துவக்கவிழாவா என்று கேட்குமளவுக்கு நிலைமை உள்ளது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.வழக்கமாக இந்த விழாவின் முதல்நாளில் பொழுதுபோக்கு அம்சம் கொண்ட ஜனரஞ்சகமான சிறந்த படத்தைத்தான் பிரீமியர் ஷோவாக திரையிடுவார்கள். இந்தாண்டு 'டெஸ்பரேட் ஹவுஸ்வைவ்ஸ்' என்ற ஹாலிவுட் ஆங்கிலத் திரைப்படம் திரையிடப்பட்டது.
படக்காட்சிக்கு வந்திருந்த அழகுதேவதை ஐஸ்வர்யா கருப்பு நிற நீண்ட கவுனில் 60 கிலோ தாஜ்மஹாலாகப் பளிச்சிட்டார். கூடியிருந்த பார்வையாளர்கள் அவரைப் பார்த்ததும் ஆரவாரம் செய்தனர்.பதிலுக்கு அவர்களைப் பார்த்து செல்லமாக சில ஃபிளையிங் கிஸ்களை பறக்கவிட்டு கிறங்கடித்துவிட்டார் 'ஐஸ்'.12 நாள் நடக்கும் இந்த விழாவில் பிரபல ஹாலிவுட் நட்சத்திரங்களான ஏஞ்சலினா ஜூலி, ஹாரிசன் ஃபோர்டு, வுடி ஆலன், பெனிலோப் க்ரூஸ் மற்றும் ராபர் டி நீரோ ஆகியோர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விழாவையொட்டி நடைபெறும் எய்ட்ஸ் நோயாளிகளுக்கு நிதி திரட்டுவதற்கான நடக்கும் இரவு விருந்தில் பிரபல பாடகி மடோனா, ஹாலிவுட் கவர்ச்சிப் புயல் ஷரோன் ஸ்டோன் ஆகியோர் முக்கிய விருந்தாளிகளாக கலந்து கொள்கின்றனர்.
விழாவில் ஹாலிவுட் மெகாஹிட் ஆக்ஷன் படங்களில் இருந்து ஆர்ட் பிலிம்கள் வரை எல்லா ரக படங்களும் இடம் பெறுகின்றன.இந்த ஆண்டு தமிழ் திரையுலகம் சார்பில் அஜீத் நடித்த பில்லா படத்தை திரையிடப் போவதாகக் கூறுகிறார்கள். ஆனால் இந்தப் படம் கேன்ஸ் விழாவின் பிரதான நிகழ்ச்சி நிரலில் இல்லை.
கேன்ஸுக்கு வெளியே திரையிடல் எனும் பிரிவில் இப்படத்தைக் கொண்டுபோகிறார்கள். இத்தகைய திரையிடலுக்கும் கணிசமான பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 comments:
Post a Comment