Monday, May 5, 2008

இந்தியர்கள் திண்ணிப் பண்டாரங்க்களா?

வாஷிங்டன்: உலக அளவில் ஏற்பட்டுள்ள உணவு நெருக்கடிக்கும், விலைவாசி உயர்வுக்கும் இந்தியாதான் காரணம் என அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சில நாட்களுக்கு முன்பு அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கான்டலீசா ரைஸ் பேசுகையில், உலக அளவில் ஏற்பட்டுள்ள உணவு நெருக்கடிக்கு இந்தியாவும், சீனாவும்தான் காரணம். இரு நாடுகளில் உள்ள மக்களும் அதிக அளவில் சாப்பிட ஆரம்பித்துள்ளனர். சத்தான உணவு வகைகளை அவர்கள் அதிகம் சாப்பிட விரும்புகின்றனர். இதனால்தான் உணவு தானியங்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

ரைஸின் இந்த கருத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் அமெரிக்க அதிபர் புஷ்ஷும் இதே கருத்தைக் கூறி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளார்.

மிசெளரியில் அதிபர் புஷ் பேசுகையில், இந்தியாவில் 35 கோடி பேர் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். இது அமெரிக்காவின் ஒட்டுமொத்த மக்கள் தொகையை விட அதிகம். இந்திய நடுத்தர வர்க்கத்தினர் இப்போது சத்தான உணவு வகைகளையே அதிகம் விரும்புகின்றனர். இது அமெரிக்காவை பாதிக்கும் அளவுக்கு உள்ளது.

இந்திய நடுத்தர வர்க்கத்தினரின் தேவை அதிகம் என்பது, அமெரிக்காவின் தேவைக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகும். தேவை அதிகரிப்பதால் விலைவாசியும் உயருகிறது. உணவுக்கு நெருக்கடியும் ஏற்படுகிறது.வளரும் நாடுகளில் பொருளாதாரம் மட்டுமல்லாது பிற துறைகளிலும் நல்ல வளர்ச்சி காணப்படுகிறது. இது நல்லதுதான். வளர்ந்த நாடுகளுக்கும் இது நல்லதுதான், காரணம் நாம் நமது பொருட்களை அதிக அளவில் விற்க முடியும் என்பதால் என்று கூறியுள்ளார் புஷ்.

இந்திய மக்கள் சத்தான உணவு சாப்பிடுவதால் அமெரிக்காவுக்கும், உலக நாடுகளுக்கும் பாதிப்பு ஏற்படுவதாக புஷ் கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

0 comments: