Tuesday, May 6, 2008

சாப்ட்வேர்-தமிழகத்தில் 3 ஆண்டுகளில் 30 லட்சம் கூடுதல் வேலைவாய்ப்புகள்

சென்னை: நாட்டின் ஒட்டுமொத்த சாப்ட்வேர் உற்பத்தி-ஏற்றுமதியில் தமிழகத்தின் பங்கு வரும் 2011ம் ஆண்டுக்குள் 25 சதவீதத்தைத் தொடும் என உள்ளாட்சித்துறை அமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.

சட்டசபையில் தகவல் தொழில்நுட்பத் துறைக்கான மானியக் கோரிக்கைகள் மீது பேசிய அவர்,அடுத்த 3 ஆண்டுகளி்ல் ஐடி துறையில் தமிழகம் 30 லட்சம் கூடுதல் வேலை வாய்ப்புகளை உருவாக்கும். இப்போது நாட்டின் ஒட்டுமொத்த சாப்ட்வேர் உற்பத்தியி்ல் தமிழகத்தின் பங்கு 11 சதவீதமாக உள்ளது.

வரும் 2011ம் ஆண்டில் இதை 25 சதவீதமாக அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.தமிழக அரசு புதிய தகவல் தொழில்நுட்பக் கொள்கையை உருவாக்கியுள்ளது. இதன்மூலம் தமிழகததை தெற்காசியாவின் ஐடி தலைமையகமாக மாற்ற என்னென்ன திட்டங்கள் தேவையோ அவை எல்லாம் நிறைவேற்றப்படும்.

இதன் மூலம் 2011ம் ஆண்டில் 8 லட்சம் கூடுதல் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். இதில் ஹார்ட்வேர் துறையில் 1 லட்சம் பேருக்கும் சாப்ட்வேர் துறையில் 7 லட்சம் பேருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும்.மேலும் இந்தத் துறையைச் சார்ந்து 22 லட்சம் மறைமுக வேலைவாய்ப்புகளும் உருவாகும். மொத்ததில் 2011ம் ஆண்டில் 30 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் புதிய தகவல் தொழில்நுட்பக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் மாநிலத்தின் வருவாயைப் பெருக்குவதோடு, நமது இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளையும் உருவாக்குவோம்.2006-07ம் ஆண்டில் தமிழகத்தின் சாப்ட்வேர் ஏற்றுமதி ரூ. 20,700 கோடியாக இருந்தது. இது 2007-08ம் ஆண்டில் ரூ. 28,000 கோடியாக உயர்ந்துள்ளது என்றார்.

1 comments:

மோகன் கந்தசாமி said...

Tamilnadu's IT exports participation has come down to 11 from 14 percentage. Anyone has the details about it?