Monday, May 26, 2008

உள்ளாடை அணிவதற்கு உரிமை இருக்கிறது

கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் ஊழியர்கள், உள்ளாடை அணிவதற்கு இருந்து வந்த தடை, மனித உரிமை ஆணையத்தின் தலையீட்டின் மூலம் முடிவுக்கு வந்திருக்கிறது.


இந்த ஆலயத்துக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். அவர்கள் செலுத்தும் காணிக்கைகள் அதற்கென உள்ள தனி அறையில் கொட்டப்பட்டு கணக்கிடப்படும். காணிக்கைகளைக் கணக்கிடும் பணியில் ஈடுபட்டு வந்த திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு ஊழியர்கள், காணிக்கைகளை உள்ளாடைக்குள் மறைத்து எடுத்துச் செல்வதாகக் கூறி, அந்த ஊழியர்கள் பணிக்கு வரும்போது, உள்ளாடை அணிய தேவஸ்வம் போர்டு தடை விதித்தது. பாரம்பரியமான வேட்டி மட்டுமே அணிய வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதை எதிர்த்து, மாநில மனித உரிமை ஆணையத்திடம் ஊழியர்கள் முறையிட்டனர். அதைத் தொடர்ந்து, அவர்கள் உள்ளாடை அணிவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை மனித உரிமை ஆணையம் ரத்து செய்திருக்கிறது. இதன் மூலம், சுமார் 250 ஊழியர்களுக்கு உள்ளாட்டை அணிவதற்கான உரிமை கிடைத்திருக்கிறது. நன்றி: பிபிசி

0 comments: