நள்ளிரவு ஒரு மணி செகண்ட் ஷோ முடிந்து, அறைக்குத் திரும்பிக் கொண்டிருந்தபொழுது, வழியில் இரண்டு போலீஸ்காரர்கள் நிறுததினார்கள்.
டூ வீலரை நிறுத்திவிட்டு, இறங்கி நின்றேன்.
ஒரு போலீஸ்காரர் என் அருகில் வந்து நின்று கொஞ்சம் ஊது! என்றார். வழக்கமான சோதனை.
ஆல்கஹால் வாசனை எனக்கு அறவே ஆகாது. ஊதிக் காட்டினேன். சற்று முன் குடித்த டீயின் வாசனை மட்டுமேமிச்சமிருந்தது.
சரி, டிரைவிங் லைசென்ஸை எடு! என்றார் இன்னொரு போலீஸ்காரர்.
எடுத்துக்கொடுத்தேன்.
சோடியம் விளக்கின் வெளிச்சத்தில் உற்றுப்பார்த்துவிட்டு, என்னிடம் திருப்பிக் கொடுத்தார். ஓ.கே. நீ போகலாம்.
தாங்க்ஸ் சொல்லி, வண்டியை ஸ்டார்ட் பண்ணப்போக, என் முதுகுக்குப் பின்னால் அந்த போலீஸ்காரர் முணுமுணுத்தார்.
சாவு கிராக்கி.

நன்றி : மின்னஞ்சலில் இதை அனுப்பியவருக்கும், இக்கதையை எழுதியவருக்கும்.
0 comments:
Post a Comment