Tuesday, May 6, 2008

கூகிள் இப்போது உங்கள் தமிழில்

இணையதளம் இன்று நம் வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கிறது.நண்பர்கள் மற்றும் குடும்பத்துடன் உரையாடல்கள், மின் அஞ்சல் பரிமாற்றங்கள், நமது கருத்துக்களைத் தெரிவித்தல் மற்றும் விவரங்களைத் தேடுதல் போன்ற பல காரணங்களுக்காக நம்மில் பலர் இணையதளத்தைப் பயன்படுத்துகிறோம்.

உங்களது நெருங்கிய கல்லூரித் தோழர் ஒருவரை உங்களுக்கு நினைவிருக்கிறதா? அவர் எங்கிருக்கிறார் என்பதைக் கண்டுபிடித்து, அவர் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதை அறிந்து கொள்வது எவ்வளவு அற்புதமாக இருக்கும்?

நீங்கள் நன்கு அறிந்துள்ள ஒரு விஷயத்தைப் பற்றிய கருத்தைத் தெரிவிக்க நீங்கள் விரும்புகிறீர்களா? நீங்கள் ஒரு சிறந்த திரைப்படவிமர்சகராக இருப்பின், இணையத்தளத்தில் உங்கள் விமர்சனங்களை நீங்கள் ஏன் வெளியிடக்கூடாது? உங்களுக்குக் விவரங்கள் ஏதேனும் தேவைபடுகிறதா? அது சமையல் குறிப்புகள், தேர்தல் விவரங்கள் போன்ற எதுவாக இருப்பினும் ஒரு பட்டனைக் க்ளிக் செய்வதன் மூலம் இவ்வனைத்தும் உங்களுக்குக் கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?

நீங்கள் ஆங்கிலம் பேசுபவராக இருந்தால், இவ்வனைத்தையும் மற்றும் இன்னும் அதிகமானவற்றையும் இணையதளத்தில் உங்களால் செய்ய முடியும். ஆனால், சில நேரங்களில் உங்கள் தாய்மொழியில் ஏதேனும் விஷயங்களை நீங்கள் பரிமாறிக் கொள்ள விரும்பலாம். நமது அன்றாட வாழ்வில் நாம் பெரும்பாலும் தாய்மொழியையே பயன்படுத்துகிறோம்.

இதுபோல் நம்மால் இணையதளத்திலும் நம் தாய்மொழியை பயன்படுத்த முடிய வேண்டும். "கூகிள் இந்தியா"வில் உள்ள நாங்கள் இது நடைபெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். அந்த முயற்சியில் நாங்கள் பின்வரும் சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளோம்.

தமிழில் சுலபமாக டைப் செய்யுங்கள். முதலாவதாக, உங்கள் ஆங்கில கீபோர்டைப் பயன்படுத்தி சுலபமாக தமிழில் டைப் செய்வதற்கான ஒரு வழியை நாங்கள் உருவாக்கியுள்ளோம். ஒரு சொல்லின் ஒலிக்கு ஏற்ப நீங்கள் டைப்செய்தால் போதும்.

உதாரணமாக, வழக்கமான ஆங்கில எழுத்துக்களைப் பயன்படுத்தி "ennudaya" என்ற சொல்லை நீங்கள் டைப் செய்து ஸ்பேஸ் (space) தட்டினால், அது தானாக தமிழ் சொல்லான "என்னுடைய"வாக மாறிவிடும்.

இத்தொழில்நுட்பமான டிரான்ஸ்லிட்ரேசன்(transliteration)ஐ நீங்கள்இந்தலாப் வலைப்பக்கத்தில் பயன்படுத்தலாம் - http://www.google.co.in/transliterate/indic/tamil. இந்த சேவையை உங்கள் கூகிள் முகப்புப் பக்கத்தில், ஒரு iGoogle gadgetஆகவும் சேர்த்துக் கொள்ளலாம். இவ்வசதி இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய இதர மொழிகளிலும் வழங்கப்படுகிறது.

மக்களிடம் இருந்து பெற்ற நல்ல வரவேற்பினால், மற்ற கூகிள் சேவைகளிலும் இத்தொழில்நுட்பத்தை அளிக்க உள்ளோம்.உங்கள் நண்பர்களுக்கு ஸ்கிராப் செய்யுங்கள். "ஆர்குட்"ல் உங்கள் பள்ளித் தோழரை நீங்கள் கண்டுபிடித்து அவருடன் உரையாட முடியும்.

இப்போது அவருக்கு உங்களால் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஸ்கிராப்களை(http://www.orkut.com/scrapbook.aspx ) அனுப்ப முடியும்.உங்கள் கருத்துக்களை வெளியிடுங்கள். உங்கள் மனம் கவர்ந்த மற்றும் நன்கு தெரிந்த விஷயம் குறித்த உங்கள் கருத்துக்களை நீங்கள் வெளியிட விரும்பினால், உங்கள் சொந்த பிளாக்(http://blogger.com/indic/ta ) ஒன்றை உருவாக்கி, அதில் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் உங்கள் கருத்துக்களை வெளியிடலாம்.

எளிதாக வலைத்தளங்களைத் தேடுங்கள். கூகுளில் இப்போது தமிழ் மொழியில் எளிதாக வலைத்தளங்களைத் தேட முடியும். கூகிள் தமிழ் தேடுதல்(http://www.google.co.in/ta ) பக்கத்திற்குச் சென்று ஆங்கில எழுத்துக்களைப் பயன்படுத்தி உங்கள் கேள்வியை டைப் செய்யத் தொடங்கினால் போதுமானது. அதனை நாங்கள்தமிழில் மாற்றி, நீங்கள் டைப் செய்யத் தொடங்கியதன் அடிப்படையிலான கேள்விகளைப் பரிந்துரைப்போம்.

உதாரணமாக, ரஜினிகாந்தைப் பற்றிய விவரங்களைக் கண்டுபிடிக்க நீங்கள் விரும்பினால், நீங்கள் "Rajinikanth" என்று டைப் செய்யத் தொடங்கினாலே போதும், நாங்கள் "ரஜினிகாந்த்" என்று உங்களுக்காக பரிந்துரைப்போம்.இந்தியில் எளிதாக மொழிபெயருங்கள். கூகுளில் இந்தி மொழிபெயர்ப்பு சேவையாக கூகிள் டிரான்ஸ்லேட்TM அறிமுகமாகியுள்ளது. இந்தி மற்றும் ஆங்கில மொழிக்கு இடையிலான மொழிபெயர்ப்பைத் தானியங்கு முறையில் செய்வதற்கு இச்சேவை உதவுகிறது.

நீங்கள் ஏதேனும் உரை அல்லது ஒரு வலைப்பக்கத்தை மொழிபெயர்க்க விரும்பினால் பின்வரும் வலைத்தளத்தில் அதை எளிதாகச் செய்து கொள்ளலாம்: http://www.google.com/translate_t. இன்று இணையதளத்தில், இந்தி தேடுசொற்களுக்கான இந்தி வலைபக்க முடிவுகளில் போதுமான விபரங்கள் கிடைப்பதில்லை. இந்நிலைமாறுமென்று நாங்கள் நம்புகிறோம்.

ஆனால் இடைப்பட்ட நேரத்தில்,தேடுசொற்களை இந்தியில் அளித்து, அதற்கு பொருத்தமான ஆங்கில பக்கங்களைத் தேடி, முடிவுகளாக வரும் ஆங்கில பக்கங்களை இந்திக்கு எளிதாக மொழிபெயர்க்க கூகிள் டிரான்ஸ்லேட் உதவும்: http://www.google.com/translate_s.இந்திய மக்கள் தொகையில், சுமார் 13% மக்கள் மட்டுமே ஆங்கில அறிவு பெற்றவர்களாக உள்ளனர். இதனை கவனத்தில் கொண்டு, ஒருவரது ஆங்கில அறிவு எந்த அளவில் இருந்தாலும், இணையத்தளத்தின் மாபெரும் பயன்களை அவர் அடைவதை உறுதி செய்யும் வகையில் இந்த சேவைகள் அமைந்துள்ளன.

நாம் அறிந்துள்ள மொழிகளைப் போலவே இணையதளத்தையும் பன்மொழிக் கழகமாக மாற்றுவோம். நண்பர்களுடன் பேசுங்கள், கருத்துக்களை வெளியிடுங்கள், உள்ளடக்கங்களை உருவாக்கி, இணையத்தளத்தில் விபரங்களை உங்கள் மொழியில் பெறுங்கள்

1 comments:

masdooka said...

'கூகிள் இப்போது உங்கள் தமிழில்' என்னும் தங்கள் பதிவுக்கு எமது 'தமிழ் இணைய நண்பன்' பதிவில் தொடுப்பு கொடுத்தேன். தினந்தோறும் எமது பதிவுக்கு ஏராளமானோர் வந்தவண்ணம் உள்ளனர். எமது பதிவு இணைய உலகில் மிகவும் பிரபல்யம் அடைய காரணமான தங்களுக்கு மிகவும் நன்றி.