Friday, April 18, 2008

வள்ளுவர் சிலை-டெல்லி தமிழ்ச் சங்கத்தில் பூமி பூஜை


டெல்லி தமிழ்ச் சங்க வளாகத்துக்கு திருவள்ளுவர் சிலை இடம் மாற்றம் செய்யப்படுவதையொட்டி அதற்கான அடிக்கல் நாட்டு விழாவும், பூமி பூஜையும் நேற்று (16ம் தேதி) நடந்தது.டெல்லி ராமகிருஷ்ணாபுரத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டது. ஆனால் இந்த சிலை எந்தவித பராமரிப்பும் இன்றி சிதிலமடைந்து வந்தது.இதையடுத்து சிலையை டெல்லி தமிழ்ச் சங்க வளாகத்துக்கு மாற்றும் முயற்சியில் அதன் நிர்வாகிகள் இறங்கினர்.தமிழக அரசியல் தலைவர்களின் உதவியோடு இந்த முயற்சி எடு்க்கப்பட்டது. இதையடுத்து சிலையை தமி்ழ்ச் சங்க வளாகத்துக்கு இடம் மாற்ற டெல்லி முதல்வர் ஷீலா தீக்ஷித் சமீபத்தில் அனுமதிளித்தார்.இதையடுத்து நேற்று தமிழ்ச் சங்க வளாகத்தில் திருவள்ளுவர் சிலை வைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தில் இதற்கான அடிக்கல் நாடு விழாவும், பூமி பூஜையும் நடந்தது.சோமாஸ்கந்த சாஸ்திரி இந்த பூமி பூஜையை நடத்தினார். இந்த நிகழ்ச்சியி்ல் டெல்லி தமிழ்ச் சங்க தலைவர் கிருஷ்ணமணி, துணைத் தலைவர் சேதுதுரை, பொதுச் செயலாளர் இரா.முகுந்தன், பொருளாளர் சந்தானம், இணைச் செயலாளர்கள் ராகவன் நாயுடு, ரமாமணி சுந்தர், முன்னாள் தலைவர்கள் பாலச்சந்திரன், ராமாமிர்தம், முன்னாள் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, வடக்கு வாசல் ஆசிரியர் கி.பென்னேஸ்வரன் மற்றும் பலர் விழாவில் கலந்து கொண்டனர்.திருவள்ளுவர் சிலையை தமிழ்ச் சங்க வளாகத்துக்கு இடம் மாற்றியதும், பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தமிழக முதல்வர் கருணாநிதி, டெல்லி முதல்வர் ஷீலா தீக்ஷித் ஆகியோரை அழைத்து திறப்பு விழாவை மிக விமரிசையாக நடத்த தமிழ்ச் சங்கம் முடிவு செய்துள்ளது.- தேட்ஸ் தமிழ்

0 comments: