Friday, April 18, 2008

பழமை + புதுமை= 'தசாவதாரம்'


பத்து வேடங்களில் நான் நடித்துள்ள தசாவதாரம், பழமையும், புதுமையும் இணைந்த கலவையாக, ரசிகர்களை புதிய களத்திற்கு இழுத்துச் செல்லும் படமாக தசாவதாரம் அமைந்திருக்கிறது என்று கலைஞானி கமல்ஹாசன் கூறியுள்ளார்.
கமல்ஹாசன் முதல் முறையாக 10 வேடங்களில் நடித்துள்ள தசாவதாரம் ரசிகர்களுக்கு விருந்து படைக்க தயாராகியுள்ளது. வருகிற 25ம் தேதி பாடல் வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடக்கவுள்ளது. ஜாக்கி சான் வந்து ஆடியோவை ரிலீஸ் செய்கிறார்.இந்த நிலையில் தசாவதாரம் குறித்து கமல் கூறுகையில், மிகக் கஷ்டப்பட்டு இப்படத்தை உருவாக்கியுள்ளோம். நேர்மையான முறையில் கடுமையாக உழைத்துள்ளோம். இப்படம் பழமையும், புதுமையும் கலந்த கலவையாக இருக்கும்.
நவீன தொழில்நுட்ப உத்திகள் இதில் புகுத்தப்பட்டுள்ளன. கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகள் படத்தில் பிரதான பங்கு வகித்துள்ளது. இப்படி ஒரு கதையை யாரும் எதிர்பார்க்க முடியாது. ரசிகர்களை புதிய களத்தில் இது இட்டுச் செல்லும்.
ஜாக்கி சானை ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரனுக்கு தெரியும் என்பதால் அவரை அழைத்துள்ளனர். அமிதாப் பச்சனும் விழாவில் பங்கேற்கிறார். பிரமாண்ட விழாவாக இது இருக்கும்.
நமது பண்பாட்டுக்கு சற்றும் சம்பந்தம் இல்லாதவராக இருந்தாலும் கூட நமது பண்பாட்ைடப் புரிந்து கொண்டு இசையமைத்துள்ளார் ஹிமேஷ் ரேஷமய்யா.
புரிந்து கொள்ளக் கூடிய தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன், திறமையான இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் என நல்ல குழுவாக இணைந்து இப்படத்தை உருவாக்கியுள்ளோம் என்று கூறியுள்ளார் கமல். - நன்றி - தேட்ஸ் தமிழ்

0 comments: