Friday, April 4, 2008
பொறுத்தது போதும் தமிழா !
" பொறுத்தது போதும் தமிழா ! "- கன்னட வெறியர்களைக் கண்டித்து உழவனின் புரட்சிக்கவி
வந்தாரை வாழவைத்து - நாம்
மடிந்தது போதும் தமிழா!
உரிமை மறுப்பாரின்
உயிரறுக்கப் போவதெப்போது தமிழா?
ஆற்று நீரும்
அருவி நீரும்
எனக்கே என்பான் - நாம்
சோற்றில் ஊற்றும் நீருக்குக்கூட
காப்புரிமை எங்களுக்கே என்பான்!
ஏன்..
பஞ்ச பூதங்களுமே
எங்கள்
பாட்டி வீட்டு சொத்துதான் என்பான்!
விக்கலால் தான்
சாவாய் நீயென
நக்கலாய்க் கூட சொல்லுவான்!
சட்டம் போட்டும்
கிடைக்காத நியாயம்
சட்டையைப் பிடித்தால்தான்
கிடைக்குமோ?
ஆட்டம் போடும்
அயலவன் கொட்டம்
எட்டி மிதித்தால்தான்
அடங்குமோ?
அறமெழுதிய வள்ளுவனின்
சிரம் மூடிய சிறியர்களுக்கு
அறமெங்கே தெரியும்?
முல்லைக்குத் தேரீந்த
பாரி கதை சொன்னால்
அவனுக்கென்ன புரியும்?
தலையாட்டிப் பொம்மையாகவே
இன்னமும் இருந்தால்
தாகமெடுக்கா
வரம் கேட்கும்
நிலை வரும் தமிழா!
பொறுத்துப் பொறுத்தே
வாழ்ந்தது போதும் தமிழா!
பொங்கி எழுவாய்
நம்மை நாமே
காப்போம் தமிழா!
Posted by "உழவன்" "Uzhavan" at 4/04/2008 09:11:00 AM
Labels: கவிதை துளிகள்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment