Wednesday, April 9, 2008

சாதிகள் இல்லைய(யா)டி பாப்பா?

சாதிகள் இல்லை(யா)டி பாப்பா?

டேய் பசங்களா... நேத்து சொன்ன மாதிரி எல்லாரும் அவங்க அவுங்க வீட்ல சாதி என்னனு கேட்டு எழுதிட்டு வந்துடீங்களா என்றார் ஒண்ணாம் கிளாஸ் கணக்கு வாத்தியார். அவர்தான் வகுப்பு ஆசிரியர். ரொம்ப கோவக்காரருங்கூட.

அப்போது தான் முத்துவுக்கு நினைவுக்கு வந்தது அப்பாட்ட கேக்க மறந்து போனது. ஐயோ வாத்தியார் வேற அடிப்பாரே என்ன பண்ணுறது என்று முத்து பயந்து கொண்டிருந்தான்.

அவன் முறை வந்தது. வாத்தியாரிடம் சொன்னதும் அவர் அவனை, ஏன்டா உயிர வாங்கறே; இந்த எச்.எம் என்னடான்னா இன்னைக்கே முடின்னு படுத்துறார். நீ என்னடான்னா தெரியல கேக்கலேங்கரே. போடா மூதேவி போய் வெளில முட்டிபோடு என்று பொரிந்து தள்ளி விட்டு அடுத்த மாணவனை கேக்க போய்விட்டார். அவர்க்கு இன்று வேல முடியாது என்ற கோவம்.

வெளிய முட்டிபோட்ட முத்து பக்கத்துலேயே அடுத்த கிளாஸ் பையன் முட்டிபோட்டு நின்றதை பார்த்து "உனக்கும் சாதி என்னனு தெரியலயாடா?" என்றான்.

அதுக்கு அவன் "அது இல்லடா, சாதிகள் இல்லையடி பாப்பாங்கற பாரதி பாட்டு எனக்கு தெரியலனு வாத்தியார் முட்டிபோட சொல்லிட்டாரு" என்றான் சோகமாய் .

மீனாள் meenakshisundaramp@gmail.com

0 comments: