Thursday, April 10, 2008

தமிழ் மருத்துவம் - ஆப்பிள்

ஆப்பிள் மருத்துவம்
குருதிக்கு செந்நிறம் தருகின்ற ஹீமோகுளோபின் ஆப்பிளில் அதிகமாகவே உள்ளது.
இரத்தத்தை சுத்தி செய்யும் சக்தியும், இரத்தப் போக்கை நிறுத்தும் ஆற்றலும் ஆப்பிளுக்கு உண்டு. இதுமட்டுமல்லாது, ஆப்பிளை அனுதினமும் உண்பவர்களின் மேனி மினுமினுப்பைப் பெறும்.
கல்லீரலை சுறுசுறுப்பாக்கும் சக்தியும், குடலிலுள்ள கிருமிகளை அழிக்கும் சக்தியும் இதற்குண்டு.
தினமும் ஆப்பிளை மென்று தின்றால், பற்களும் ஈறுகளும் வலுப்பெறுவதோடு, வலியும் வராமல் தடுக்கும்.
ஆப்பிள் நல்ல மலமிளக்கியாதலால், குழந்தைகளுக்கும் கொடுக்கலாம். பேதியாகும் குழந்தைகளுக்கு வேகவைத்து பிசைந்து கொடுக்கலாம்.
ஆப்பிளில் பாஸ்பரஸ் சத்து இருப்பதால், மூளைக்கோளாறு உள்ளவர்கள் உண்ண, மூளை தெளிவு பெறும்.
தூக்கத்தில் நடத்தல், தூக்கம் வராமை, தூக்கத்தில் புலம்பல், நரம்புத் தளர்ச்சி போன்ற நோய்கள், தினம் காலை மாலை இருவேளை சாறுபிழிந்து அருந்த குணமாகும்.
மன உளைச்சலால் வருந்துவோர், ஆப்பிள் சாறு பருகிடின் களைப்பு நீங்கி புதுத்தென்போடு இருப்பதோடு, இதயமும், நரம்பு மண்டலமும் ஆற்றல் பெறும்.
- படித்ததும், பாட்டி சொன்னதும்

1 comments:

mohamedali jinnah said...

நல்ல கட்டுரை .நீங்கள் மட்டும் வைத்திருந்தால் எப்படி? எங்களுக்கும் தாருங்குள் நாங்களும் வெளியிடுவோம்