Wednesday, April 2, 2008

டாடா 'நானோ' கார் 1 லட்சம் ரூபாய்க்கும் கீழ்? (TATA Nano car)

மும்பை : டாடா நிறுவனம் தயாரித்து வரும் 'நானோ' ரக கார், 1 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக விற்க, நிறுவனத்தின் நிபுணர் குழு தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.உலகிலேயே விலை மலிவான காரை, டாடா நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. இதன் விலை ரூ. 1 லட்சம்; வரிகள் உட்பட ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் ஆகும்.இந்த சாதா மாடல் காரை தவிர, வசதிகளுடன் கூடிய 'நானோ' ரக கார்களையும் டாடா நிறுவனம் விற்பனை செய்ய உள்ளது.ஒரு லட்சம் ரூபாய் சாதா காரில், பவர் ஸ்டீரிங், பவர் விண்டோ, ஏர் கண்டிஷன் போன்ற வசதிகள் இருக்காது. ஆனால், விலை அதிகமான 'நானோ' கார் ரகங்களில் இந்த வசதிகள் இருக்கும். 'சிடி' போட்டு பாட்டு கேட்க, சிகரெட் பற்றவைக்க வசதிகள் இருக்கும்.சாதாரண 'நானோ' கார்களுக்கான முன்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வரும் அக்டோபரில் இருந்து இந்த கார்கள், சாலைகளில் ஓடும். மேற்கு வங்கம் சிங்கூரில் அமைக்கப்பட்டுள்ள டாடா தொழிற்சாலையில் இந்த கார்கள் தயாரிக்கப்படுகின்றன.'நானோ' ரக கார் விலையை, ஒரு லட்சத்துக்கும் குறைவான விலையில் விற்க முடியுமா என்று ஆராய, நிபுணர் குழுவை டாடா நிறுவனம் அமைத்துள்ளது. காரில் உள்ள சாதனங்களை மாற்றி, அதே சமயம் பாதுகாப்பானதாக காரை உருவாக்கி, ஒரு லட்சத்துக்கும் குறைவான விலையில் விற்க இந்த குழு பரிசீலித்து வருகிறது.இப்போது தயாரிக்கப்படும் 'நானோ' காரில் அதிக அளவு ஸ்டீல் பயன்படுத்தப்படுகிறது. அதற்கு பதில், உறுதியான பிளாஸ்டிக் பயன்படுத்தினால் விலை குறைக்கலாம் என்று குழு திட்டமிட்டுள்ளது.குழுவின் பரிந்துரை வந்தபின், ஒரு லட்சத்துக்கும் குறைவான விலையில் காரை தயாரிப்பது பற்றி டாடா நிறுவனம் இறுதி முடிவெடுக்கும். நன்றி - தினமலர்

0 comments: