விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் " நீயா? நானா? " நிகழ்ச்சியின் காரசாரமான வாதங்கள் விவாதங்கள் அனைத்தும் பங்குபெறும் நேயர்களின் கருத்துக்கள் அல்ல. இவைகள் அனைத்தும், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களால், ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு, பங்கு பெற வருபவர்களிடம், நீங்கள் இப்படித்தான் பேசவேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். அதற்கு இணங்காது தங்களது கருத்துக்களை சொல்ல முனைந்தால், அவர்களுக்கு வாய்ப்புக் கொடுக்கப்படுவதில்லை என்ற செய்தி இப்போது பரவலாக வெளிவர ஆரம்பித்துள்ளன.
சில சமயங்களில், ஏற்கனவே ஒரு சிலரை மட்டும் தேர்வு செய்து விட்டு, அவர்களுக்கு எதை, எப்போது பேசவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு அமர வைக்கப்படுகிறார்கள். மீதமுள்ள இருக்கைகளை நிரப்புவதற்காக மட்டுமே, மற்றவர்களை அழைக்கின்றனர் என்பதாகவும், இவர்கள் சொல்வதை மட்டும் ஏன் என்று கேள்வி கேட்காமல் அப்படியே பேசினால், அதற்காக பணம் கூட கொடுக்கப் படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
இந்த நிகழ்ச்சி நல்ல வருவாயை ஈட்டித் தருகின்றபோதிலும், குளிர்சாதன வசதி கூட இல்லாத அறையில் வைத்துத்தான் படமாக்குகிறார்கள் என்றும், நிகழ்ச்சியை நடத்தும் கோபிநாத் அவர்கள், நிகழ்ச்சியில் பங்கு பெறுபவர்கள் அவர்களின் சொந்தக் கருத்துக்களைத் தெரிவிக்கும்போது, அவர்களிடம் சில சமயம் கடுமையாக நடந்து கொள்வதாகவும் செய்திகள் வருகின்றன.
இவைகளெல்லாம் உண்மையாக இருக்குமானால், தொலைக்காட்சி நிர்வாகம் தலையிடுமா? இல்லை பங்கேற்பாளர்களின் தலைவிதி இதுதான் என்று விட்டுவிடுமா?
- மக்களில் ஒருவன்
0 comments:
Post a Comment