Tuesday, March 25, 2008

இப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்..! நகைச்சுவைச் செய்தி

1. எந்தப் பொருள் வாங்கினாலும், ரொம்ப நாளைக்கு அதைச் சுத்தி இருக்கற ஜவ்வு பேப்பரைக் கிழிக்கவே மாட்டீங்க..!

2. உங்க சமையலில் உப்பு, புளி, மிளகாய் சேராமல் எந்த உணவும் இருக்காது..!

3. உங்களுக்கு வந்த அன்பளிப்புப் பொருட்களில், பால் குக்கரும், அஜந்தா சுவர்க் கடிகாரமும் நிச்சயம் இடம் பிடிச்சிருக்கும்..! ரொம்பப் பேரு தங்களுக்கு வந்ததை அடுத்தவங்க தலையில் [அன்பளிப்பாதான்] கட்டிவிட திட்டம் போட்டுகிட்டு இருப்பாங்க..!

4. வெளிநாட்டுக்குப் போயிட்டு வந்தீங்கன்னா, ஒரு மெகா சைஸ் சூட்கேஸோடதான் ஊருக்குத் திரும்புவீங்க..!

5. எந்த நிகழ்ச்சிக்குப் போனாலும் 1 மணி நேரம் தாமதமாப் போவீங்க. அதுதான் சரியா இருக்கும்ன்னு மனசார நம்புவீங்க..!

6. மளிகைப் பொருட்களின் பாலிதீன் உறைகளை பத்திரமா எடுத்து வைப்பீங்க. பின்னாடி உதவும்ங்கற தொலைநோக்குப் பார்வையோடு..!

7. உங்களுக்கு வரும் கடிதங்களில் எல்லா ஸ்டாம்பிலும் சீல் விழுந்திருக்கான்னு பார்ப்பீங்க. தப்பித்தவறி சீல் விழாம இருந்தா, அந்த ஸ்டாம்பை கவனமா பிரிச்சு எடுத்து எங்கேயாவது வச்சுட்டு, அப்புறம் சுத்தமா மறந்துடுவீங்க.

8. சினிமா தியேட்டரோ, விரைவுப் பேருந்தோ.. இருக்கையின் இருபக்க கை வைக்கும் இடத்துக்கும் சொந்தம் கொண்டாடுவீங்க..!

9. ரெட்டைப் பிள்ளைகள் இருந்தா, ஒரே மாதிரி ட்ரெஸ் தச்சுக் கொடுப்பீங்க. ரைமிங்கா பேர் வைப்பீங்க.. [ரமேஷ், மகேஷ். அமிர்தா,சுகிர்தா..]

10. ஏ.சி. திரையரங்குன்னா முட்டை போண்டா எடுத்துட்டுப் போய் நாறடிப்பீங்க.. ஏ.சி. கோச்சுன்னா, கருவாட்டுக் குழம்பை கீழே ஊற்றி கப்படிக்க வைப்பீங்க.!

11. விமானமோ, ரயிலோ, பஸ்ஸோ... ஒரு கும்பல் வந்து ஏத்திவிடணும்ன்னு எதிர்பார்ப்பீங்க..!

12. புதுசா கார் வாங்கினா, அதுக்கு மணப்பெண் அலங்காரம் பண்ணிதான் எடுத்துட்டு வருவீங்க..! கொஞ்ச நாளைக்கு சீட் பேப்பரைக் கிழிக்கவே மாட்டீங்க.. நம்பர் எழுதறீங்களோ இல்லையோ.. கொலைகார முனி துணைன்னு ஸ்டிக்கர் ஒட்ட மறக்கவே மாட்டீங்க..!

13. செல் போனோ, டி.வி.ரிமோட்டோ.. லாமினேஷன் செஞ்சாதான் உங்களுக்கு நிம்மதி..!

14. அடுத்த பிள்ளைகளைப் பாரு.. எவ்வளவு சாமர்த்தியமா இருக்காங்கன்னு.. என்று உங்க பெற்றோர் சொல்லாம இருக்கவே மாட்டாங்க.. அடுத்த பெற்றோரைப் பாருங்க.. எவ்வளவு ஜாலியா செலவழிக்கறாங்கன்னு நீங்க நெனைப்பீங்க.. ஆனா சொல்ல மாட்டீங்க..!

15. உங்க வீட்டு ஃபிரிட்ஜ்ல, சின்னச் சின்னக் கிண்ணங்களில், 3 மாசமா தயாரிச்ச குழம்பு, கறி வகையறா இருக்கும்..!

16. உங்க சமையலறை அலமாரியில் காப்பித்தூளுக்கு இலவசமா வந்த பெட் ஜாடி குறைஞ்சது ரெண்டு மூணு இருக்கும்..!

17. அதிகமா உபயோகிக்கப்படாத பொருள் உங்ககிட்ட அவசியம் நாலைஞ்சு இருக்கும். [உ-ம். பிரஷர் குக்கர், காப்பி மேக்கர், வாக்குவம் கிளீனர், பிரெட் டோஸ்ட்டர், மைக்ரோ வேவ் அவன், கேஸ் அடுப்புல க்ரில் இப்படி..]

18. பொங்கல், தீபாவளின்னா வீட்டுல சந்தோஷமா விழுந்து கெடக்க மாட்டீங்க.. தண்ணியைப் போட்டுட்டு, தகராறுபண்ணி, போலீஸ்-ஸ்டேஷன்ல குத்தவச்சுருப்பீங்க..!

19. கல்யாணத்துக்கு ஊர் பூரா பத்திரிகை வச்சு கலெக்ஷன் பார்ப்பீங்க..

20. இந்த விவரம் உங்களுக்கு ரொம்பப் பிடிச்சிருக்கும்.. உடனே உங்க நண்பர்களுக்கு அனுப்பனும்ன்னு கை பரபரக்கும்..


நன்றி : மின்னஞ்சல் வழியாக வந்த தகவல் இது.

2 comments:

ஸ்வாதி said...

1. எந்தப் பொருள் வாங்கினாலும், ரொம்ப நாளைக்கு அதைச் சுத்தி இருக்கற ஜவ்வு பேப்பரைக் கிழிக்கவே மாட்டீங்க..!


ஆமாம்.. அழுக்குப் படாமல் இருக்க வேண்டுமல்லவா? உங்களுக்கு ஜூதர்கள் அறிமுகமில்லைப் போல் இருக்கிறது. அவங்க தங்களுடைய சோபா செட்டுக்கு எல்லாம் பாலித்தீன் உறை போட்டிருப்பாங்க.


2. உங்க சமையலில் உப்பு, புளி, மிளகாய் சேராமல் எந்த உணவும் இருக்காது..!


உணவு வயிற்றை நிரப்பிவதற்கு மட்டுமில்லை ..நாவிலிருக்கும் அறு சுவைக்காகவும் தான். ருசியான உணவு சமைப்பது ஒரு கை தேர்ந்த கலை'; அதை ருசித்து சாப்பிடுவது ரசனை.3. உங்களுக்கு வந்த அன்பளிப்புப் பொருட்களில், பால் குக்கரும், அஜந்தா சுவர்க் கடிகாரமும் நிச்சயம் இடம் பிடிச்சிருக்கும்..!


அதனாலென்ன? நம்ம ஊர் பொருட்கள் தான் நமக்கு உபயோகத்துக்கு இலகு... இன்னும் இங்கிருக்கும் தமிழர்களே நமது நாட்டிலிருந்து மண் சட்டி, சுமித் மிக்ஸி, இட்லி குக்கர், என்று வைத்திருக்க தான் விரும்புகின்றோம். அதில் என்ன தவறு? அல்லது என்ன பரிகாசம்?


ரொம்பப் பேரு தங்களுக்கு வந்ததை அடுத்தவங்க தலையில் [அன்பளிப்பாதான்] கட்டிவிட திட்டம் போட்டுகிட்டு இருப்பாங்க..!


ஒரு பொருள் அளவுக்கு அதிகமாகவோ எண்ணிக்கையில் அதிகமாகவோ இருந்தால் என்ன செய்வது? தூக்கி குப்பையிலா போட முடியும்? இல்லாதவர்களுக்கு நம்ம நினைவா கொடுத்தாப் போச்சு.4. வெளிநாட்டுக்குப் போயிட்டு வந்தீங்கன்னா, ஒரு மெகா சைஸ் சூட்கேஸோடதான் ஊருக்குத் திரும்புவீங்க..!


ஆமா... வெளிநாட்டிலிருந்தாலும் அவனோட சொந்தங்களை மறக்காம ஆளுக்கொரு பரிசுப் பொருளோடு வரும் மனிதனுடைய பிரயாணப் பெட்டி பெரிதாகவும் கனமாகவும் தானிருக்கும் அவனுடாஇய பாசத்தைப் போல்.


5. எந்த நிகழ்ச்சிக்குப் போனாலும் 1 மணி நேரம் தாமதமாப் போவீங்க. அதுதான் சரியா இருக்கும்ன்னு மனசார நம்புவீங்க..!


ஒருத்தர் மட்டுமா தாமதமா போகப் போறாங்க? எல்லா தமிழ்ர்களும் தானே? அதனால 7 மணி நிகழ்சியை 6 மணிக்கு தொடக்குவோம்னு முன்னாடியே அழைக்கும் போது சொல்லிட்டாப் போச்சு...டாண் னு 1 மணி நேரம் தாமதமாக சரியா நிகழ்சி தொடங்கும் நேரமான 7 மணிக்கு எல்லாரும் ஆஜராவாங்க. :):)6. மளிகைப் பொருட்களின் பாலிதீன் உறைகளை பத்திரமா எடுத்து வைப்பீங்க. பின்னாடி உதவும்ங்கற தொலைநோக்குப் பார்வையோடு..!


அதுவும் நல்லது தான். சமயத்தில் குப்பைத் தொட்டிக்குள் குப்பைகளை கட்டிப் போடுவதற்கு பை தேடினால் கிடைப்பதே கஷ்டம். இப்படி வைத்திருக்கும் பைகளில் போட்டு கட்டி எறியலாமே..குப்பைத் தொட்டியில் குப்பை போடும் பழக்கமிருந்தால்?7. உங்களுக்கு வரும் கடிதங்களில் எல்லா ஸ்டாம்பிலும் சீல் விழுந்திருக்கான்னு பார்ப்பீங்க. தப்பித்தவறி சீல் விழாம இருந்தா, அந்த ஸ்டாம்பை கவனமா பிரிச்சு எடுத்து எங்கேயாவது வச்சுட்டு, அப்புறம் சுத்தமா மறந்துடுவீங்க.


நீங்க மாத்தி எழுதியிருகீங்க ..அந்த முத்திரையை எடுத்து பத்திரமா வைச்சு மறந்து போனதாய் எழுதலை அங்கு. பத்திரமா எடுத்து வைப்பாங்க அவங்க யூஸ் பண்ணுவதற்கு என்று இருந்தது. அதுல ஒண்ணும் தப்பில்லை. சீல் இல்லாத முத்திரை ஒட்டி கடிதம் அனுப்பினால் சரி.8. சினிமா தியேட்டரோ, விரைவுப் பேருந்தோ.. இருக்கையின் இருபக்க கை வைக்கும் இடத்துக்கும் சொந்தம் கொண்டாடுவீங்க..!


தமிழர் மட்டுமென்றில்லை எந்த கிரகம் பிடிச்ச புத்தியுள்ள மனிதனும் அப்படி தான். அமெரிக்காவில் பெரும்பாலான மக்கள் பேரூந்துகளிலும் , திரையரங்கிலும் நடந்து கொள்ளும் விதத்தில் மண்டை காய்ஞ்சிடும்...9. ரெட்டைப் பிள்ளைகள் இருந்தா, ஒரே மாதிரி ட்ரெஸ் தச்சுக் கொடுப்பீங்க. ரைமிங்கா பேர் வைப்பீங்க.. [ரமேஷ், மகேஷ். அமிர்தா,சுகிர்தா..]

ரெட்டைப் பிள்ளை என்று மட்டுமில்லை அடுத்தடுத்து பிறந்தாலும் அப்படித் தான்.10. ஏ.சி. திரையரங்குன்னா முட்டை போண்டா எடுத்துட்டுப் போய் நாறடிப்பீங்க.. ஏ.சி. கோச்சுன்னா, கருவாட்டுக் குழம்பை கீழே ஊற்றி கப்படிக்க வைப்பீங்க.!


8வதற்கான பின்னூட்டமே இதற்கும்.11. விமானமோ, ரயிலோ, பஸ்ஸோ... ஒரு கும்பல் வந்து ஏத்திவிடணும்ன்னு எதிர்பார்ப்பீங்க..!


:) அதற்கு பெயர் தான் பிரியாவிடை;


12. புதுசா கார் வாங்கினா, அதுக்கு மணப்பெண் அலங்காரம் பண்ணிதான் எடுத்துட்டு வருவீங்க..! கொஞ்ச நாளைக்கு சீட் பேப்பரைக் கிழிக்கவே மாட்டீங்க.. நம்பர் எழுதறீங்களோ இல்லையோ.. கொலைகார முனி துணைன்னு ஸ்டிக்கர் ஒட்ட மறக்கவே மாட்டீங்க..!


எல்லா இன மக்களிடமும் அப்படிப்பட்ட பழக்கம் இருக்கின்றது. செப்டம்பர் 2001ல் நடந்த உலக வர்த்தக மையக் கட்டிடத்தில் நடந்த பயங்கரவாதச் செயலுக்குப் பிறகு பெரும்பாலான அமெரிக்கர்களின் கார்களில் உலக வ்அங்கிக் கட்டிடமும் , அது இடிந்த திகதியும் பொரிக்கப்பட்ட ஸ்டிக்கர் தான் ஒட்டி வைத்திருக்கிறார்கள்.

பலர் தமது நாடுகளின் தேசியக் கொடிகளை ஒட்டி வைத்திருக்கிறார்கள்.

இங்கு நானிருக்கும் ஸ்டேட்டண்ட் ஐலண்ட் பகுதியில் ஒரு மனிதர் தனது வாகனத்தாலேயே பிரபலமானவராய் இருக்கிறார். அவர் அமெரிக்காவினனொவ்வொரு பண்டிகைக் காலங்களிலும் தனது வான் முழுவதும் அந்தப் பண்டிகைக்கான படங்கள், ஸ்டிக்கர்கள், கொடிகள் என்று ஒட்டி, கட்டி அந்த வாகனத்தில் ஊர்வலம் மாதிரி தினமும் தான் எங்கு போனாலும் அந்த வாகனத்திலேயே போவார்.

காதலர் தினமானால் இதயங்களும், காதல் தேவதைகளுமாக வாகனம் சிவப்பு & வெள்ளை கலந்த ஸ்டிக்கர்ஸ், படங்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். நத்தார் பண்டிகை என்றால் சாண்டா, இயேசு பாலன், நத்தார் மரம், கலர் பல்ப்கல் என்று ஜொலிக்கும்.

இதெல்லாம் ஓரினத்துக்கான அடையாளங்களல்ல.13. செல் போனோ, டி.வி.ரிமோட்டோ.. லாமினேஷன் செஞ்சாதான் உங்களுக்கு நிம்மதி..!


அப்படியா?
நான் இதுவரை பண்ணவே இல்லையே?14. அடுத்த பிள்ளைகளைப் பாரு.. எவ்வளவு சாமர்த்தியமா இருக்காங்கன்னு.. என்று உங்க பெற்றோர் சொல்லாம இருக்கவே மாட்டாங்க.. அடுத்த பெற்றோரைப் பாருங்க.. எவ்வளவு ஜாலியா செலவழிக்கறாங்கன்னு நீங்க நெனைப்பீங்க.. ஆனா சொல்ல மாட்டீங்க..!


அதுவும் எல்லா இனத்துப் பெற்றோரிடமும் இருக்கு; பிள்ளைகளிடமும் இருக்கிறது.


15. உங்க வீட்டு ஃபிரிட்ஜ்ல, சின்னச் சின்னக் கிண்ணங்களில், 3 மாசமா தயாரிச்ச குழம்பு, கறி வகையறா இருக்கும்..!


எல்லோருக்கும் அப்படித்தான். இல்லேனா மைக்கிரோஅவன்ல சமைக்கிற சாப்பாட்டு வகையறாக்களாக வைத்திருப்பார்கள்.


16. உங்க சமையலறை அலமாரியில் காப்பித்தூளுக்கு இலவசமா வந்த பெட் ஜாடி குறைஞ்சது ரெண்டு மூணு இருக்கும்..!


ஒன்று வாங்கினால் மற்றது இலவசம் (Buy one get another one free)என்று எல்லா இடமும் இந்த வியாபார யுக்தி இருக்கத் தான் செய்கிறது.17. அதிகமா உபயோகிக்கப்படாத பொருள் உங்ககிட்ட அவசியம் நாலைஞ்சு இருக்கும். [உ-ம். பிரஷர் குக்கர், காப்பி மேக்கர், வாக்குவம் கிளீனர், பிரெட் டோஸ்ட்டர், மைக்ரோ வேவ் அவன், கேஸ் அடுப்புல க்ரில் இப்படி..]


அதனால?????????18. பொங்கல், தீபாவளின்னா வீட்டுல சந்தோஷமா விழுந்து கெடக்க மாட்டீங்க.. தண்ணியைப் போட்டுட்டு, தகராறு பண்ணி, போலீஸ்-ஸ்டேஷன்ல குத்தவச்சுருப்பீங்க..!


ஏன் வெள்ளைக்காரன் தண்ணி அடிக்க மாட்டானா? அல்லது ஐரீஷ்காரன் தகராறு பண்ண மாட்டானா?


19. கல்யாணத்துக்கு ஊர் பூரா பத்திரிகை வச்சு கலெக்ஷன் பார்ப்பீங்க..


இத்தாலிக்காரர் திருமணத்தில் மாப்பிள்ளை பக்கமும் பெண் பக்கமும் பெரிய பெரிய பைகள் இருக்கும் மொய் கவர் வைக்க.
அமெரிக்க கல்யாண வரவேற்பில் வெள்ளை ஆர்கண்டி , டிஷூ பேப்ப்ர்களால் அழகாக அலங்கரிக்கப்பட்ட கிணறு வடிவத்திலோ அல்லது தபால் பெட்டி வடிவத்திலோ வைத்திருப்பார்கள் , மொய் கவர் & பரிசுப் பொருட்கள் வைக்கவென்று...


20. இந்த விவரம் உங்களுக்கு ரொம்பப் பிடிச்சிருக்கும்.. உடனே உங்க நண்பர்களுக்கு அனுப்பணும்ன்னு கை பரபரக்கும்..!

நான் அனுப்பவே இல்லை....

அன்புடன்
சுவாதி

- உழவன் said...

நன்றி சுவாதி அவர்களே !
மின்னஞ்சல் வழியாக சுற்றிக் கொண்டிருந்த
இந்த செய்திகளுக்கு ஒரு முற்றுப் புள்ளி
வைத்துள்ளீர்கள் !

- உழவன்