சென்னை: சென்னை டெஸ்ட் வெற்றிக்கு இந்திய வீரர்கள் ஆயத்தமாகின்றனர். கேப்டன் கும்ளே, சச்சின், தோனி உள்ளிட்ட வீரர்கள் தீவிர பயிற்சி மேற் கொண் டனர்.இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் வரும் 26ம் தேதி சென்னையில் துவங்குகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் ஏற்கனவே சென்னை வந்து விட்டனர். நேற்று அனில் கும்ளே தலைமையிலான இந்திய வீரர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் சுமார் 3 மணி நேரம் பயிற்சி மேற்கொண்டனர். மனநலம் முக்கியம்: அணிக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தென் ஆப்ரிக்காவை சேர்ந்த மனநல பயிற்சியாளர் பேடி அப்டன் ஒவ்வொரு வீரரையும் தனித்தனியாக சந்தித்து பேசினார். பின்னர் வீடியோ பயிற்சி நிபுணர் ராமகிருஷ்ணன் `ஸ்லோ மோஷன்' மூலம் படங்களை காண்பித்து பேட்டிங், பவுலிங் குறைகளை சுட்டிக் காட்டினார். இதனை சேவக், யுவராஜ் கவனமாக பார்த்தனர். இப்போட்டிக்கான அணியில் இடம் பெறாத இளம் வேகப் புயல் இஷாந்த் சர்மாவும் வீடியோ காட்சிகளை பார்த்து தனது தவறுகளை உணர்ந்து கொண்டார்.வந்தார் தோனி:கடைசி கட்டத்தில் உடல் தகுதியை நிரூபித்து சென்னை போட்டிக் கான அணியில் தங்களது இடத்தை உறுதி செய்த தோனி, ஹர்பஜனும் தீவிர பயிற்சி செய்தனர். இத்தொடரில் காயம் காரணமாக இடம் பெறாத தமிழக வீரர் முரளி கார்த்திக்கையும் மைதானத் தில் காண முடிந்தது. இவர் இடது காலில் `கிரப் பாண் டேஜ்' அணிந்தவாறு பயிற்சி நடக்கும் இடத்துக்கு மெதுவாக வந்தார்.நல்ல வெயில்: சென்னையில் கிரிக்கெட் நடக்கும் போதெல்லாம் மழை அதிகமாக விளையாடும். கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்ததால் ரசிகர்கள் கவலை அடைந்தனர். இம்முறையும் சிக்கல் ஏற்படுமோ என்று அஞ்சினர். ஆனால் நேற்று நல்ல வெயில் அடித்தது. இதனால் இந்திய வீரர்கள் சிரமம் இல்லாமல் பயிற்சி செய்தனர். தென் ஆப்ரிக்க அணியினர் ஓட்டல் நீச்சல் குளத்தில் பெரும்பாலான நேரத்தை செலவிட்டனர். மைதான பராமரிப் பாளர்கள் ஆடுகளத்தை செம்மைப்படுத்துவதில் ஈடுபட்டனர். மைதானத்தில் ஈரமாக இருந்த பகுதிகள் நன்கு உலர்ந்து விட்டதால், போட்டி நடப்பதில் எவ்வித சிக்கலும் இருக்காது.இளமை+அனுபவம்: இப்போட்டி குறித்து தென் ஆப்ரிக்க அணியின் நட்சத்திர வீரர் காலிஸ் கூறுகையில்," அனுபவம் மற்றும் இளம் வீரர்கள் சம அளவில் இடம் பெற்று இருப்பதால் இந்திய அணி வலுவாக உள்ளது. முன்பு சொந்த மண்ணில் மட்டும் சாதித்த வந்த இந்திய வீரர்கள் இப்போது ஆஸ்திரேலியாவிலும் வெற்றிக் கொடி நாட்டி அசத்தியுள்ளனர். எனவே டெஸ்ட் தொடர் மிகவும் கடினமானதாக இருக்கும்," என்றார்.சச்சின் ஆர்வம்: தென் ஆப்ரிக்க சுழற்பந்துவீச்சாளர் பால் ஹாரிஸ் கூறுகையில், "உலகின் தலைசிறந்த பேட்ஸ் மேனான சச்சினுக்கு எதிராக பந்து வீச ஆர்வமாக உள்ளேன்," என்றார். - நன்றி தினமலர்
Monday, March 24, 2008
சென்னை டெஸ்ட்: இந்தியா ரெடி (Chennai Test cricket match - India ready)
Posted by "உழவன்" "Uzhavan" at 3/24/2008 08:10:00 AM
Labels: செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment