Monday, March 30, 2009

நீ கறிவேப்பிலை மாதிரி?

ணவு உண்ணும்போது, கறிவேப்பிலையை பார்த்தவுடன், ஏதோ கரப்பான்பூச்சியைப் பார்த்ததுபோல் நாம் தூக்கி எறிகிறோம். கறிவேப்பிலையின் நன்மைகளை அறியாததால்தான் நாம் இவ்வாறு செய்கிறோம்.


கறிவேப்பிலையில் புரதம், இரும்புச்சது, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ், கொழுப்பு, கார்போஹைட்ரேட், வைட்டமின் ஏ, சி போன்ற சத்துக்கள் உள்ளன. இந்த சத்துக்களால் கண் பார்வைக் கோளாறுகள், சோகை நோய்கள் குணமடைகின்றன.

மலச்சிக்கலைப் போக்குதல், ஜீரண சக்தியை அதிகரித்தல், பேதியைக் கட்டுப்படுத்துதல், பித்தத்தை மாற்றி வாந்தியைத் தடுத்து வயிற்று இரைச்சலைப் போக்குதல் போன்ற குணநலன்கள் கறிவேப்பிலைக்கு உண்டு.

தலைமுடி வளரவும், கண்களுக்கு ஒளிதரவும் கறிவேப்பிலையில் உள்ள ஊட்டச் சத்துக்கள் உதவும்.

முகத்தில் அம்மை வடு இருப்பின், ஒரு பிடி கறிவேப்பிலை, கசகசா ஒரு கரண்டி, கஸ்தூரி மஞ்சள் ஒரு துண்டு இவற்றை அம்மியில் வைத்து அரைத்து, முகத்தில் தடவுங்கள். பின் அரை மணி நேரம் கழித்து முகம் கழுவவும். இவ்வாறு இரு வாரங்களுக்கு மேலாக செய்துவந்தால் தழும்புகள் அடியோடு மறைந்துவிடும்.

கறிவேப்பிலையை வறுத்து மிளகு, சீரகம், சுக்கு இவற்றைப் பொடி செய்து, உப்பு சேர்த்து சோற்றுடன் பிசைந்து சாப்பிட, பசி எடுக்காமல், வயிறு மந்தமாக இருப்பின் குணமாகும்.

"அவனுக்கு நீ கறிவேப்பிலை மாதிரிதான்; பார்த்து கவனமாக அவனிடம் இரு" என்று பலர் சொல்வதுண்டு. இனியும் யாராவது இப்படி சொல்வார்கள்?

- தமிழ் மருத்துவம் நூலிலிருந்து

3 comments:

வடுவூர் குமார் said...

எனக்கும் இந்த கருவேப்பிலையை பார்த்தால் தூக்கிப்போடத்தான் மனசு சொல்லும் அதனால் நான் சமைக்கும் போது பொடிப்பொடியாக நறுக்கி போட்டுவிடுவேன்.

"உழவன்" "Uzhavan" said...

வாங்க வடுவூர் குமார்.. நீங்க சொல்றதும் நல்ல ஐடியாதான்.. நன்றி

குடந்தை அன்புமணி said...

இனிமே, அப்படியே சாப்பிடுவேன்! தொகுப்புக்கு நன்றி!