Wednesday, March 25, 2009

இப்படியும் ஒரு ஆட்டோவா?

மும்பை பந்ராவில் உள்ள ஒரு ஆட்டோவின் போட்டோவானது மின்னஞ்சலில் வந்தது. அதனைப் பார்த்தபோது ஆச்சரியமாகவும் இருந்தது. அதேசமயம் மகிழ்ச்சியாகவும் இருந்தது. பயணிகளை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு அழைத்துச் செல்கிறோம்; அதற்கான கூலியைப் பெறுகிறோம் என்பதோடு மட்டுமல்லாமல், பயணிகளைக் கவருவதற்காக தன் ஆட்டோவில் எப்படியெல்லாம் வசதிகளை ஏற்படுத்தியிருக்கிறார் என்பதைப் பாருங்கள்.

படம் 1
"ஊனமுற்றோருக்கு 25% தள்ளுபடி" ஆஹா.. என்ன ஒரு பொது நலம். இன்னமும் நாட்டில் நல்லோர்கள் உள்ளார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம்தான்.


படம் 2

தொலைக்காட்சிப் பெட்டி, அதற்குக் கீழே கை/முகம் துடைக்கும் தாள்கள், இடது பக்கம் நாட்காட்டி, பேனா மற்றும் பயணியின் இருக்கையை நோக்கி ஒரு மின் விசிறி


படம் 3
இடது பக்கம் முதலுதவிப் பெட்டியும், வலது பக்கம் செய்தித் தாள்கள் வைக்க ஒரு பெட்டியும் உள்ளது. இதில் ஹிந்தி, ஆங்கிலம், மராத்தி, குஜராத்தி மொழி செய்தித் தாள்கள் உள்ளனவாம்.

சென்னை ஆட்டோக்காரர்களுக்கு இந்த செய்தியை நாம் எப்படி கொண்டுபோய் சேர்க்கப்போகிறோமோ?

1 comments:

Anonymous said...

//***சென்னை ஆட்டோக்காரர்களுக்கு இந்த செய்தியை நாம் எப்படி கொண்டுபோய் சேர்க்கப்போகிறோமோ? ***//
பாஸ் நாங்க ஆட்டோவுக்கே மிட்டர் போடுறது கிடையாது எங்கிட்டபோயி என்னலாமோ பேசிகிட்டுயிருக்கிங்க
போங்க பாஸ், இது சென்னை இங்கு நாங்க வைக்குறதுதான் சட்டம் பிடிச்சிருந்தா இருங்க இல்லனா போய்கிட்டே இருங்க