Tuesday, February 24, 2009

அரிசி aRice- ஒரு வேடிக்கையான சொல்லாராய்ச்சி

ஆங்கிலேயன் நம்மையாண்ட காலம்:
(வெள்ளைக்காரன் பேசுகிற எல்லா டயலாக்கையும் அவன் ஸ்டைல்ல படிக்கவும்.)
ஏய்.. குப்சாமி, எல்லா பிரெட் ரோஸ்ட் பண்ணி எடுத்திட்டு வா..
சரிங்க துரை. இதோ பைவ் மினிட்ஸ்ல வந்திடுறேன். ("இந்த காஞ்சிபோன ரொட்டியை எப்படித்தான் மூணுவேளையும் தின்பாங்களோ. இத திங்க கையில கத்தி வேற" இப்படி குப்புசாமி மனசுக்குள்ள நினைச்சுக்கிடுறார்)
குப்சாமி.. உங்க வீட்ல என்ன ஃபூட்?
சோறு துரை.. அரிசிச் சோறு
அர்ஸ் சோர்?? கொஞ்சம் என்க்கும் வேணும். நா சாப்டு பாக்குது. சாப்பிட்டு பார்க்கிறார் வெள்ளைக்கர துரை.
வாவ்.. சூப்பர் குப்சாமி. எப்டி பண்ணுவீங்க?
அரிசிய வேகவைக்கனும் துரை.
வேகவைக்கனும் னா?
ம்..ம்.. பாயில்.. பாயில் பண்ணனும்.
ஒகே.. டெய்லி குப்சாமி என்கு அர்ஸ் கொண்டு வருது. ஒகே?
இப்படியாக, வெள்ளைக்காரன் உச்சரித்த "அரிசி" என்ற வார்த்தை, காலப்போக்கில் மாற்றமடைந்து இன்று "ரைஸ்" என்று வந்துள்ளது. அரிசி என்ற வார்த்தையை ஆங்கிலத்தில் அப்படியே aRICE என்று எழுதியபின், எப்பொழுது முதல் எழுத்து "a" மறைந்ததோ தெரியவில்லை.
தகவல்: பள்ளியில் தமிழாசிரியர் சொல்லக் கேட்டது.

4 comments:

தமிழ் said...

நண்பரே
நகைச்சுவைக்கு என்றாலும்
இதில் சற்றும் உண்மையில்லை

அரிசி - ஒரு வேடிக்கையான,விவரமற்ற சொல்லாராய்ச்சி

என்று இடுகை இருந்தால் பரவாயில்லை.

இது தமிழின் நம்பத்தன்மையே கேள்விக்குறியாக்கிறது

தயவு செய்து இடுகையின் தலைப்பை

அரிசி aRice- ஒரு வேடிக்கையான,விவரமற்ற சொல்லாராய்ச்சி

என்று மாறவும்

"உழவன்" "Uzhavan" said...

maatrappattu vittathu Nanbare!

uzavan

சதுக்க பூதம் said...

Rice என்ற பெயர் லத்தீன் மொழி(oryza)லிருந்து வந்தது

தமிழ் said...

நன்றி நண்பரே

அன்புடன்
திகழ்