Monday, January 5, 2009

தமிழர்களைப் பாதுகாக்கத் தவறிய காங்கிரஸை தமிழகக் கட்சிகள் புறக்கணிக்குமா?

இலங்கை பிரச்னையில் மத்திய அரசின் உணர்ச்சியற்ற அணுகுமுறைக்கு காலம் கடப்பதற்குள் விடை தெரிய வேண்டும் என்று, பிரதமர் மன்மோகன் சிங்கை பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

இது தொடர்பாக பிரதமருக்கு அவர் எழுதிய கடித்தத்தில் கூறியிருப்பதாவது:

இலங்கை பிரச்னை தொடர்பாக டிசம்பர் 4ஆம் தேதி முதல்வர் கருணாநிதி தலைமையில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் உங்களை நேரில் சந்தித்துப் பேசினோம்.

ஒரு மாதம் கடந்துள்ள நிலையில் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இலங்கை பிரச்னைக்கு அமைதி வழியில் அரசியல் தீர்வு காண வேண்டும் என்று தாங்கள் கூறியதை இங்கு நினைவு கூறுகிறேன்.

இலங்கை பிரச்னை தொடர்பாக டெல்லியின் உணர்ச்சியற்ற, அக்கறையற்ற அணுகுமுறையைத் தான் இது காட்டுகிறது. டெல்லி அதிகாரிகளுக்கு தமிழர்களைவிட இலங்கை அரசு தான் முக்கியமாகப்பட்டுள்ளது.

தமிழர்களின் கவுரவம், சுய மரியாதை குறித்து டெல்லி அதிகாரிகளுக்கு அக்கறை இல்லையா? இதையே இறுதி பதிலாக எடுத்துக் கொள்ளலாமா? காலம் கடப்பதற்கு முன் எங்களுக்கு விடை தேவை.

இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.
 
கேள்வி:
 
விடுதலைப் புலிகளின் தலைவன் பிரபாகரனை உயிரோடு பிடித்தால், இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என சமீபத்தில் மத்திய அமைச்சர் இலங்கை அரசைக் கேட்டுக்கொண்டதிலிருந்தே மத்திய அரசின் நிலை என்ன என்று எல்லா தமிழர்களும் அறிவர். அப்பாவித் தமிழர்களின் உயிரோடும் உடைமைகளோடும் விளையாடும் இந்த காங்கிரஸோடு வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் எந்தத் தமிழகக் கட்சிகளும் கூட்டணி அமைக்காமல் இருந்தால்தான், நாம் அனைவரும் இன உணர்வுள்ள தமிழர்கள். பதவி சுகம் கண்ட தமிழகத்தில் இது நடக்குமா?
அரசியல் கட்சிகள் இதில் தவறினால், தமிழனைப் புறக்கணிப்போரை மக்கள் நாம் புறக்கணிப்போம்.
 

2 comments:

தமிழ் said...

/விடுதலைப் புலிகளின் தலைவன் பிரபாகரனை உயிரோடு பிடித்தால், இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என சமீபத்தில் மத்திய அமைச்சர் இலங்கை அரசைக் கேட்டுக்கொண்டதிலிருந்தே மத்திய அரசின் நிலை என்ன என்று எல்லா தமிழர்களும் அறிவர். அப்பாவித் தமிழர்களின் உயிரோடும் உடைமைகளோடும் விளையாடும் இந்த காங்கிரஸோடு வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் எந்தத் தமிழகக் கட்சிகளும் கூட்டணி அமைக்காமல் இருந்தால்தான், நாம் அனைவரும் இன உணர்வுள்ள தமிழர்கள். பதவி சுகம் கண்ட தமிழகத்தில் இது நடக்குமா?
அரசியல் கட்சிகள் இதில் தவறினால், தமிழனைப் புறக்கணிப்போரை மக்கள் நாம் புறக்கணிப்போம்./

சரியாகச் சொன்னீர்கள்

Anonymous said...

மன்மோகனையும்,சோனியாவையும்
கொல்லப்படும் பச்சிளங்குழந்தைகள் சார்பாக செருப்பு மாலைகள் போட்டு ஊர்வலங்கள் நடக்கவேண்டும்