பள்ளிக் குழந்தைகள் இருளைப் பகலாக்கி விளையாட்டுப் போட்டி கண்டோம் ! குளிர் காலத்தில் கூட குளிர் அறை கேட்டோம் ! முழத்துக்கொரு விளக்கு வைத்து பொதுக்கூட்டம் போட்டோம் ! கொசு மட்டுமே நடமாடும் நடு இரவில் கூட விளக்கு வைத்து விளம்பரப் பலகையை மினுங்க வைத்தோம் !
Tuesday, November 18, 2008
மின் தட்டுப்பாடு
பாடம் படித்துக் கொள்ளட்டும்
சூரியனே..
உன் மாலைப் பொழுதை
சற்று நீட்டித்துக் கொள் !
வீட்டு பட்ஜெட்டில்
மெழுகு வர்த்தியின்
எண்ணிக்கையாவது
சற்றுக் குறையட்டும்
மின்மினிப் பூச்சிகளே
எங்கள் வீட்டிற்குள்
வந்து விளையாடுங்கள் !
எரியாத தெருவிளக்கின் அடியில்
எப்படி பூ விற்பாள்
எங்கள் ஊர் பூக்காரி ?
நிலாவே
அமாவாசையன்றும் கூட
சிறிது நேரம் வந்துவிட்டு போ !
எரியும் அடுப்பின் வெளிச்சத்தில்
எப்படி எங்களால்
ஒரு ருபாய் அரிசியில்
கல் பொறுக்க முடியும் ?
அலங்கார விளக்குகள் நடுவே
அமைச்சரை அழைத்து வந்தோம் !
இருந்தது தீர்ந்ததால்
இருளாகிப் போனது இப்போது !
இயற்கையே ...
இருளைப் போக்க
நீ
வருவது எப்போது ?
Posted by "உழவன்" "Uzhavan" at 11/18/2008 11:12:00 AM
Labels: கவிதை துளிகள்
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
\\பள்ளிக் குழந்தைகள்
பாடம் படித்துக் கொள்ளட்டும்
சூரியனே..
உன் மாலைப் பொழுதை
சற்று நீட்டித்துக் கொள் !\\
ஆகா அருமை
\\வீட்டு பட்ஜெட்டில்
மெழுகு வர்த்தியின்
எண்ணிக்கையாவது
சற்றுக் குறையட்டும்
மின்மினிப் பூச்சிகளே
எங்கள் வீட்டிற்குள்
வந்து விளையாடுங்கள் !\\
எப்படிங்க அது. வாவ் ...
\\எரியும் அடுப்பின் வெளிச்சத்தில்
எப்படி எங்களால்
ஒரு ருபாய் அரிசியில்
கல் பொறுக்க முடியும் ?
பூமிக் கூரையிலிருக்கும்
விண்மீனே .. எங்கள்
கூரை வீட்டுக்குள்ளும் வருவாயா?\\
அண்ணா சும்மா நச் நச் நச்
\\முழத்துக்கொரு விளக்கு வைத்து
பொதுக்கூட்டம் போட்டோம் !
கொசு மட்டுமே நடமாடும்
நடு இரவில் கூட
விளக்கு வைத்து
விளம்பரப் பலகையை
மினுங்க வைத்தோம் !
அலங்கார விளக்குகள் நடுவே
அமைச்சரை அழைத்து வந்தோம் !\\
உண்மை உண்மை.
எப்ப திருந்துவாங்க அப்படீன்னு பார்த்துக்கிட்டே இருக்க வேண்டியதுதான்.
எப்படி திருத்தலாம்னு வேண்டுமானால் சிந்திக்கலாம்.
சம்பந்தம் இல்லாமல் ஒரு கேள்வி
ரமணா படம் நல்லா இருந்திச்சிதான?
தங்களின் மனம் திறந்த பாராட்டுகளுக்கு மிக்க நன்றி !
உழவன்
www.tamiluzhavan.blogspot.com
www.tamizhodu.blogspot.com
tamil.uzhavan@gmail.com
Post a Comment