ஹைதராபாத்:ஐபிஎல் கிரிக்கெட் நடன அழகிகளின் ஆடைகள் ஆபாசமாக இரு்பபதாக எழுந்த குற்றச்சாட்டுகளை தொடர்ந்து அவர்களது ஆடைவிதிகளை மாற்றுவதற்கு ஆந்திரா கிரிக்கெட் சங்கம் ஒப்புக் கொண்டுள்ளது.
ஐபில் டுவென்டி 20 கிரிக்கெட் போட்டித் தொடர்களில் வீரர்களையும் ரசிகர்களையும் மைதானத்தில் உற்சாகப்படுத்துவதற்காக வெளிநாட்டு நடன அழகிகளை இந்திய கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது. இந்த நடன அழகிகளின் ஆட்டமும் அணிந்திருக்கும் ஆடைகளும் பார்ப்பவர்களைக் கூச்சப்படவைக்கும் அளவுக்கு படு ஆபாசமாக இருப்பதாக பாஜக உள்ளிட்ட பல தரப்பில் இருந்தும் புகார் எழுந்தன.
மும்பையில் நடந்த ஆட்டத்தின்போது பார்க்கமுடியாத அளவுக்கு படுகவர்ச்சியாக இருந்தது என்று மத்திய அமைச்சரும், சிவசேனையினரும் எழுப்பிய குற்றச்சாட்டை தொடர்ந்து அடுத்தடுத்த ஆட்டங்களில் நடன அழகிகளுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
இந்த நிலையில் ஆந்திராவில் பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.இது தொடர்பாக ஆந்திரா கிரிக்கெட் சங்க செயலாளர், அம்மாநில பாஜக தலைவர் தத்தாத்ரேயா மற்றும் போலீசார் இன்று நடத்திய பேச்சுவார்த்தையில் வெளிநாட்டு நடன அழகிகளுக்கு புதிய ஆடை விதிகளை அமல்படுத்துவது குறித்து ஒப்புக்கொள்ளப்பட்டது.இந்த முடிவை இன்றைய போட்டியில் இருந்தே நடைமுறைப்படுத்த எழுத்துமூலம் பாஜவுக்கு உறுதி தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹைதராபாத் உப்பால் ஸ்டேடியத்தில் நடக்கவுள்ள இன்றைய ஆட்டத்தில் டெக்கான் சார்ஜர்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியினர் மோதிக் கொள்கின்றனர். முன்னதாக நடன அழகிகளின் ஆபாச நடனத்தை கண்டித்து ஸ்டேடியத்தை முற்றுகையிடப்போவதாக பாஜகவினர் அறிவித்திருந்தனர். தற்போது கவர்ச்சி ஆடைகளுக்கு கட்டுப்பாடு
0 comments:
Post a Comment