Monday, May 26, 2008

வீரர்களுடன் 'உறவு': சர்ச்சையில் நடிகை

ஆப்கானிஸ்தானில் நிலை கொண்டுள்ள ஆஸ்திரேலிய ராணுவ வீரர்களுடன் ஆஸ்திரேலிய நடிகை தானியா சயீட்டா, செக்ஸ் வைத்துக் கொண்டதாக வெளியாகியுள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலிய டிவி ஸ்டன்ட் ஷோவான ஹூ டேர்ஸ் வின்ஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் தானியா சயீட்டா. இந்தியில் வெளியான மிஸ்டர் பிளாக், மிஸ்டர் ஒயிட் ஆகிய படங்களிலும் சயீட்டா நடித்துள்ளார். இதனால் அவரை பாலிவுட் நடிகை என்றே ஆஸ்திரேலிய பத்திரிக்கைகள் எழுதுகின்றன.

இதுதவிர பே வாட்ச் தொடரிலும் தலை காட்டியுள்ளார். இங்கிலாந்து டிவி நாடகமான மிஷன் இம்பிளாசிபிள் தொடரிலும் நடித்துள்ளார்.சயீட்டா தற்போது பெரும் சர்ச்சை ஒன்றில் சிக்கியுள்ளார். ஆப்கானிஸ்தானில் அமைதியை நிலை நாட்டுவதற்காக சென்றுள்ள ஆஸ்திரேலிய படையின் முக்கிய வீரர்கள் சிலருடன் சயீட்டா, செக்ஸ் உறவு வைத்துக் கொண்டதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த மாதம் சயீட்டா, ஆப்கானிஸ்தான் சென்றிருந்தார். அங்கு முகாமிட்டுள்ள ஆஸ்திரேலிய வீரர்களை உற்சாகப்படுத்துவதற்காக இந்த டிரிப்பை மேற்கொண்டார் சயீட்டா. 17 நாட்கள் அங்கு தங்கியிருந்தார்.

அப்போது, டாரின் கோவ்ட் என்ற இடத்தில் உள்ள ராணுவ முகாமில் தங்கியிருந்த முக்கிய வீரர்கள் சிலருடன் அவர் செக்ஸ் உறவு வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக புகைப்படங்களும், வீடியோவும் எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ஆஸ்திரேலியா பாதுகாப்பு அமைச்சர் ஜோயல் பிட்ஸிப்பானுக்கு ஆஸ்திரேலிய ராணுவ தலைமை ஒரு அறிக்கை அனுப்பியிருந்தது. அதில் சயீட்டா வந்தது, தங்கியது, உறவு கொண்டது குறித்த தகவல்கள் இடம் பெற்றிருந்தது. மிகவும் ரகசியத் தகவலாக இது அனுப்பப்பட்டிருந்தது.ஆனால் இந்தக் கடிதப் போக்குவரத்து தற்போது லீக் ஆகி விட்டது. இதனால் ஆஸ்திரேலிய ராணுவம் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளது.

சயீட்டா பெயரைக் குறிப்பிட்டு கடிதம் அனுப்பியதன் மூலம், தனி நபர் ரகசியக் காப்புச் சட்டத்தை மீறி விட்டதாக ராணுவம் ஒப்புக் கொண்டு, சயீட்டாவிடம் மன்னிப்பு கோரியுள்ளது.இந் நிலையில், இதுகுறித்து விசாரணை நடத்த பாதுகாப்பு அமைச்சர் பிட்ஸிப்பன் உத்தரவிட்டுள்ளார்.

எப்படி ரகசியக் கடிதம் லீக் ஆனது என்பது குறித்து விசாரிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.ஆனால் இந்தத் தகவலை சயீட்டா மறுத்துள்ளார். இது முற்றிலும் பொய்யான ஒரு தகவல். ஒரு ராணுவ வீரருடன் தனியாக பேச வேண்டும் என்று நான் விரும்பினால் கூட அது அவ்வளவு சீக்கிரம் நடைபெற முடியாது. நிலைமை அப்படி இருக்க, நான் முக்கிய வீரர்களுடன் உறவு வைத்துக் கொண்டதாக கூறுவது நிச்சயம் பொய்யான தகவலாகத்தான் இருக்க முடியும்.நான் உறவு வைத்துக் கொண்டதாக பாதுகாப்பு அமைச்சருக்கு கடிதம் அனுப்பப்பட்டதாக கூறப்படுவதும், அது லீக் ஆகி விட்டதாக கூறப்படுவதும் என்னால் நம்பவே முடியவில்லை. இது முற்றிலும் பொய்யான தகவல்.இது எனது மரியாதை, ஒழுக்கம், நன்னடத்தையை சேதப்படுத்துவதாக உள்ளது. இதுகுறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து வருகிறேன் என்றார் சயீட்டா.

இதற்கிடையே, ஆஸ்திரேலிய எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை கப்பென்று பிடித்துக் கொண்டு பிரதமர் கெவின் ரூட்டுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.இந்த நிலையில் ஆஸ்திரேலிய ராக் கலைஞர் ஆங்க்ரி ஆண்டர்சன் என்பவர்தான் இந்த சர்ச்சையை எழுப்பியதாக கூறப்படுகிறது. ஆனால் ஆண்டர்சன் இதை மறுத்துள்ளார்.

சயீட்டா ஆப்கானிஸ்தான் வந்து போன பின்னர் ஆண்டர்சன் அங்கு வந்து இசை நிகழ்ச்சிகளை நடத்தி விட்டுப் போனார் என்பது குறிப்பிடத்தக்கது.நடிகை சயீட்டா, லண்டனில் வசித்து வருகிறார்.

0 comments: