Wednesday, May 28, 2008

பாண்டியன் எக்ஸ்பிரசில் 'ஹனிமூன்' கோச்!

மதுரை: இளம் தம்பதிகளின் வசதிக்காக மதுரை-சென்னை இடையிலான பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஹனிமூன் கோச் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மொத்தமுள்ள 22 கோச்சுகளில் ஒரு கோச்சை மட்டும் விசேடமாக மாற்றி, ஹனிமூன் கோச் என மாற்றியுள்ளனர். இந்தக் கோச்சில், 4 ஜோடிகள் பயணிக்கலாம். இதுதவிர 4 பேர் செல்லக் கூடிய வகையிலான 3 கூபே பெட்டிகள் உள்பட மொத்தம் 18 பேர் இந்த கோச்சில் பயணிக்க முடியும்.

இந்தக் கோச்சில் மதுரையிலிருந்து சென்னைக்குப் பயணிக்கு ஒரு ஜோடிக்கு ரூ. 2,750 கட்டணமாகும்.இந்த கோச் முழுவதும் தரையில் ரெட் கார்பெட் விரித்துள்ளனர்.வெப்ப நிலைக்கேற்ப தானாக மாறிக் கொள்ளும் வகையிலான ஏசி, டீப்பாய், லெட்டர் பேடுகள், படுக்கை, கம்பளி, சோப், பட்டன் விளக்குள் என ஸ்டார் ஹோட்டல் வசதிகள் அத்தனையும் இந்த கோச்சில் அடக்கம்.பெல் அடித்தால் ஓடி வந்து உபசரிக்க அட்டென்டர்களும் உண்டு.

விரைவில் டிவி, எப்எம் ரேடியோ ஆகிய வசதிகளையும் சேர்க்கவுள்ளனராம். மேலும் ரயில் எந்த இடத்தில் போய்க் கொண்டிருக்கிறது என்பதை அறியும் வகையில் எலக்ட்ரானிக் டிஸ்பிளே வசதியும் செய்யப்படவுள்ளதாம்

2 comments:

சரவணகுமரன் said...

அட அட அட...

Anonymous said...

IDHUKAAGA INUM ORU KALYAANAM PANNIKALAAM POLA