புதுடில்லி: அமெரிக்காவைச் சேர்ந்த மைக்ரோசாப்ட் நிறுவனம், ரூ. 700 கோடி வருமான வரி செலுத்த வேண்டும் என, இந்திய வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.மைக்ரோசாப்ட் நிறுவனம், 1999ம் ஆண்டு, இந்தியாவில் தனது சாப்ட்வேர் மற்றும் ஹார்டுவேர் பொருட்களின் விற்பனையை துவக்கியது. அப்போது, அமெரிக்காவை சேர்ந்த கிரேஸ்மேக் கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்துக்கு, மைக்ரோசாப்ட் நிறுவனம், லைசென்ஸ் வழங்கி, அதன்மூலம், இந்தியாவில் சாப்ட்வேர் மற்றும் ஹார்டுவேர் விற்பனை செய்யப்பட்டது. இந்த நடைமுறையை மேற்கொண்டதால், இந்தியாவில், மேற் கொள்ளப்படும் வர்த்தகத்தால், தனக்கு எந்த வருமானமும் இல்லை என, மைக் ரோசாப்ட் நிறுவனம் கூறிய து. இது குறித்து இந்திய வருமான வரித்துறை ஆய்வு செய்தது. ராயல்டி அடிப்படையில் தான், இந்தியாவில், மைக்ரோசாப்ட் நிறுவன சாப்ட்வேர் மற்றும் ஹார்டுவேர் பொருட்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம், 1999ம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டு வரை, மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு அதன் துணை நிறுவனமான கிரேஸ்மேக் நிறுவனம் மூலம் ரூ. இரண்டாயிரத்து 240 கோடி வருவாய் கிடைத்துள்ளது. வருமான வரி சட்டத்தின் 9(1)(4) பிரிவின் கீழ், ராயல்டிக்கு 15 சதவீத வரி விதிக்கப்பட வேண்டும். இதன்படி பார்த்தால், மைக்ரோசாப்ட் நிறுவனம் ரூ. 350 கோடி வருமான வரி செலுத்த வேண்டும். இத்துடன் வட்டியை சேர்த்தால், அந்நிறுவனம் செலுத்த வேண்டிய தொகை ரூ. 700 கோடியை எட்டும் என, டில்லி, வருமான வரித்துறை(மேல்முறையீடு) கமிஷனர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது குறித்து ஆய்வு செய்வதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Saturday, April 5, 2008
மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு (Microsoft) இந்திய வருமான வரித்துறை உத்தரவு என்ன?
Posted by "உழவன்" "Uzhavan" at 4/05/2008 08:01:00 AM
Labels: செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment