Friday, April 25, 2008

தசாவதாரம் ஆடியோ வெளியீட்டு விழா


சென்னை : சென்னையில்நடந்த தசாவதாரம் ஆடியோ வெளியீட்டு விழாவில் ஆடியோ குறுந்தகட்டை ஜாக்கிசான் வெளியிட்டார். முதல்வர் கருணாநிதி பெற்றுக்கொண்டார். இந்தி நடிகர் அமிதாப்பச்சன் மலையாள நடிகர் மம்முட்டி பங்கேற்றனர்.
தமிழ் சினிமா வரலாற்றில் முதல் முறையாக நடிகர் கமல்ஹாசன் 10 வேடங்களில் நடித்துள்ள படம் தசாவதாரம். இந்த படத்தை ரூ.50 கோடி செலவில் ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரித்துள்ளார். டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியுள்ளார். பல்வேறு சிக்கல்களை கடந்து இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

முதல்வர் கருணாநிதி : தசாவதாரம் படத்தின் ஆடியோ சென்னையில் இன்று வெளியிடப்பட்டது. சென்னை நேருஉள் விளையாட்டு அரங்கில் இரவு நடந்த விழாவில்ல் ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசான் பங்கேற்று ஆடியோ கேசட் மற்றும் சி.டி.யை வெளியிட்டார்.
தமிழக முதல்வர் கருணாநிதி, பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், தமிழ் சூப்பர் ஸ்டார் ரஜினி, மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி, தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி உள்ளிட்ட இந்திய திரையுலக நட்சத்திரங்கள் பலரும் பங்கேற்றனர்.
இவ்விழாவுக்கான செலவு மட்டும் ரூ.10 கோடி ஆகும். தமிழ்சினிமா வரலாற்றிலேயே இப்படி ஒரு பிரமாண்டமான விழா நடைபெற்றதில்லை

0 comments: