மழைத் துளியாய் வீழ்ந்தாலும்
சிப்பியின் வயிற்றில் வீழ்
முத்துகளாய் வெளிவருவாய்!
சிப்பியின் வயிற்றில் வீழ்
முத்துகளாய் வெளிவருவாய்!
கற்களாய் வீழ்ந்தாலும்
சிற்பியின் உளிபட்டு விழும் கற்களாய் வீழ்
சிற்பமாய் உருப்பெருவாய்!
சிற்பமாய் உருப்பெருவாய்!
நீராய் வீழ்ந்தாலும்
நீர்வீழ்ச்சியாய் வீழ்
வீழும்போதும் கம்பீரமாய்
ரசிக்கப்படுவாய்!
வீழும்போதும் கம்பீரமாய்
ரசிக்கப்படுவாய்!
வண்ணமாய் வீழ்ந்தாலும்
வானவில்லாய் வீழ்
விண்ணும் மண்ணும் இணையும்
வண்ணப் பாலமாய் விரும்பப்படுவாய்!
நெருப்பாய் வீழ்ந்தாலும்
விண்ணும் மண்ணும் இணையும்
வண்ணப் பாலமாய் விரும்பப்படுவாய்!
நெருப்பாய் வீழ்ந்தாலும்
எரிமலைக் குழம்பாய் வீழ்
விழ்ந்தபின்னும் விளை நிலமாய்
உபயோகப்படுவாய்!
விழ்ந்தபின்னும் விளை நிலமாய்
உபயோகப்படுவாய்!
மீனாள்
0 comments:
Post a Comment