கனிமொழிக்கு மந்திரி பதவியைப் பெறுவதற்காகவே, கலைஞர் அவர்கள், காங்கிரஸ்காரர்கள் முன்னால் தலையாட்டிப் பொம்மையாகவே செயல்பட்டிருக்கிறார் என்பதே இப்போதைய அரசியல் வட்டாரத் தகவல். இந்தக் கருத்தை எடியூரப்பா அவர்களும் ஆமோதித்துள்ளதாகவே ஜூ.வி. யிலும் செய்தி வெளியாகியுள்ளது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், கனிமொழி அவர்களுக்கு மந்திரி சபையில் இடம் கிடைத்தால், வெளிவந்துகொண்டிருக்கும் செய்திகள் அனைத்தையும் நாமே உண்மையாக்கிவிடுவோம் என்று கருதிதான், இப்போதைக்கு அத்திட்டத்தை, கலைஞர் அவர்களின் பாணியிலேயே சொல்லுவதானால், இப்போதைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது; நிறுத்தி வைக்கப்படவில்லை என்பதுதான் இப்போதைய அரசியல் செய்திகள்.
" கத்திரிக்காய் முத்தினால் கடைத்தெருவுக்கு வராமலா போகும் " பொறுத்திருந்து பார்ப்போம் !
1 comments:
//" கத்திரிக்காய் முத்தினால் கடைத்தெருவுக்கு வராமலா போகும் " பொறுத்திருந்து பார்ப்போம் //
உழவன் அய்யா,
அடப் பாவி;நம்ம கோணவாய் அம்மா கொஞ்சம் குள்ளமா/கருப்பா இருக்கறதாலே கத்திரிக்காய்னு கிண்டல் அடிக்கறீங்களே;இருங்க இருங்க;நம்ம புறநானூற்றுத் தாய் சீக்கிரமே பரங்கிக்காய் மாறி ஆகி தமிழகமே வியக்கும் வண்ணம் முன்னேறுவாங்க.
பாலா
Post a Comment