Tuesday, April 29, 2008

ஷ்ரியாவின் 'ஜில்' பெல்லி டான்ஸ்



இதுவரை இந்திய நடிகைகள் செய்திராத ஒரு புதுமையை ஷ்ரியா செய்யவுள்ளார். புதிதாக நடிக்கவுள்ள ஆங்கிலப் படத்தில் பெல்லி டான்ஸ் ஆடி பட்டையைக் கிளப்பவுள்ளாராம்.


தமிழில் ஷ்ரியா வசம் இப்போது இருக்கும் ஒரே படம் கந்தசாமி மட்டும்தான். வடிவேலுவுடன் குத்தாட்டம் ஆடப் போனதால் முன்னணி ஹீரோக்கள் எல்லாம் ஷ்ரியா பக்கம் திரும்பிக் கூட பார்ப்பதே இல்லையாம். இதனால் விசனப்படாமல் வாய்ப்புகளை பெருக்கிக் கொள்ளத் தேவையான வழிகளில் கவனம் செலுத்தி வருகிறார் ஷ்ரியா.


தமிழில் இப்படி தள்ளாட்டம் இருந்து வரும் நிலையில் அவரைத் தேடி ஆங்கிலப் பட வாய்ப்பு வந்துள்ளது. 'Other end of the line' என்ற அந்த ஆங்கிலப் படத்தில் ஷ்ரியாவுக்கு ஜில் ஜில்லான கேரக்டராம். அதாவது பெல்லி டான்ஸ் ஆடும் நாயகியாக வருகிறார் ஷ்ரியா.


ஹாலிவுட் ஆசாமிகள் பெரும்பாலும் டூப் போடாமல்தான் காட்சிளை ஷூட் செய்வார்கள். எனவே ஷ்ரியாவைக் கூப்பிட்டு மறக்காமல் பெல்லி டான்ஸை கற்றுக் கொள்ளுங்கள் என்று கூறி விட்டனர். என்ன செய்வது என்று யோசித்த ஷ்ரியா, பெல்லி டான்ஸ் குறித்த சில சிடிக்களை வாங்கி, லோக்கலில் உள்ள மாஸ்டர் ஒருவரின் உதவியுடன் தினசரி ஆடி கற்றுக் கொண்டு வருகிறாராம்.


பார்க்கத்தான் பெல்லி டான்ஸ் ஈசியாகவும், கிளுகிளுப்பாகவும் தெரிகிறது. ஆனால் ஆடிப் பார்த்தால் பெண்டு கழன்று போய் விடுகிறது என்று அங்கலாய்க்கிறாராம் ஷ்ரியா. எப்படித்தான் இதை ஆடுகிறார்களோ என்றும் அதிசயிக்கிறார்.


கடுமையாக பிராக்டிஸ் செய்ததில், ஓரளவுக்கு இடுப்பாட்டும் வித்தையில் தேர்ந்து விட்டாராம். முழு ரிகர்சல் பார்க்க ரெடியாகி வருகிறாராம். அது முடிந்ததும், பெல்லி டான்ஸில் கலக்கி விடுவேன் என்கிறார் தன்னம்பிக்கையுடன்.


சரி சிவாஜிக்குப் பிறகு எப்படி இருக்கிறது தொழில் என்று கேட்டால், சிவாஜி பிரமாண்டம். ரஜினியின் காமெடி கலந்த நடிப்பு பிரமிக்க வைத்தது. அவருடன் சேர்ந்து நடித்ததை பெரும் பாக்கியமாக கருதுகிறேன். மீண்டும் ரஜினியுடன் சேர்ந்து நடிக்க ஆர்வமாக உள்ளேன் என்கிறார்.


திருப்பதியில் தனது இடுப்பைப் பிடித்து ரசிகர் ஒருவர் கிள்ளிய அனுபவம் ஷ்ரியாவுக்கு இன்னும் மறக்க முடியவில்லையாம். அதை பெரிய கசப்பான அனுபவமாக அவர் கருதுகிறார்.நடிகைகளுக்கு சுய மரியாதை அவசியம். இதுபோல பொது இடத்தில் அவ மதிக்கப்படுவது தடுக்கப்பட வேண்டும் என்கிறார் கோபமாக.


தெலுங்குத் திரையுலகில் கிளாமருக்கு யாரும் ஆட்சேபனை சொல்வதில்லை. ஆனால் தமிழில்தான் கொஞ்சம் கிளாமராக வந்தாலும் கூட முனுமுனுக்கிறார்கள் என்பதும் ஷ்ரியாவின் முக்கிய வருத்தங்களில் ஒன்று.

0 comments: