Tuesday, April 22, 2008

விஜயின் "குருவி" படக் கதை - சிரிப்ப அடக்கிகிட்டு படிங்க


வழக்கமான கதை அமைப்பில் வெளிவரும் படமல்ல "குருவி". படத்தின் கதாநாயகன் விஜய் மற்றும் கதாநாயகி திரிஷா இவர்களுக்கு இணையாக, இப்படத்தில் இரு குருவிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என்பதுதான் "குருவி" யின் ஹைலைட்.

பச்சைப் பசேலென எங்கு பார்த்தாலும் பசுமையாக இருக்கும் ஒரு அழகிய கிராமமான "கிழக்குவயல்" தான் நம்ம விஜயின் சொந்த ஊர். அப்படினா இந்த ஊருக்கு மேற்கே இருக்கும் ஊருக்கு என்ன பேருன்னு சொல்லவேண்டிய அவசியம் இல்ல. ஆமா.. நீங்க நெனச்ச மாதிரி அது " மேற்குவயல்" தான். அதுதான் நம்ம திரிஷாவோட சொந்த ஊரு. அதுமட்டுமல்ல.. வழக்கமா எல்லா சினிமாலயும் வர்ற மாதிரி இந்த ரெண்டு ஊருக்காரங்களுக்கும் ஆகவே ஆகாது.

விஜயோட கிழக்குவயல்காரங்க எல்லாரும் குருவி வளர்க்கிறாங்க. இது இவங்க ஊரு பழக்கமாம். குருவி வளர்க்குறதுனா இவங்களுக்கு உயிராம்.

இந்த ஊருக்காரங்க வளர்க்கிற குருவிமேல பொறாமைப்பட்டு, திரிஷாவோட மேற்குவயல் காரங்க கிளி வளர்க்குறாங்க. எல்லாருடைய வீட்டுலயும் குறஞ்சது ரெண்டு கிளியாவது இருக்கும். இந்த ஊருக்காரங்க போன் கூட யூஸ் பண்ணமாட்டாங்களான். கிளிட்ட சொல்லிவிட்டா, அது போயி பக்கத்து தெருவில யாருட்ட போயி தகவல் சொல்லனுமோ, கரெக்டா போயி சொல்லிருமாம். கிரேட்ல.

ஒருநாளு, பக்கத்து டவுண்ல போயி, நம்ம விஜய் கத்திரிக்கா வியாபாரம் பண்ணபோறாரு. தெருத்தெருவா வியாபாரம் பண்ணிக்கிட்டு போய்க்கிட்டே இருக்கும்போது, எதிரில ஒரு பொண்ணு, கண்டாங்கி புடவை கட்டி, மிளகாய் பழம் மாதிரி சும்மா செக்கச்செவேனு மோரு வித்துக்கிட்டு வருது. ஆமா.. நீங்க நெனச்ச மாதிரி அது திரிஷாவேதான்.

இப்படி ரெண்டுபேரும் அடிக்கடி தெருவில சந்திச்சதுல, ரெண்டுபேரும் லவ்வுல விழுந்திடுராங்க.

இனிமேலதான் கதை சூடு பிடிக்கப்போகுதுன்னு, படத்தோட இயக்குநர் தரணி சொல்றாரு. ம்..ம்.. அதையும்தான் பார்ப்போமே..

குருவியே வளர்க்கக்கூடாது; எல்லாரும் கிளிதான் வளர்க்கனுங்கிற கொள்கையில இருக்கிற மேற்குவயல் ஊருல, நம்ம திரிஷா மட்டும் குருகி வளர்க்க ஆரம்பிக்குறாங்க. எல்லாம் விஜய் மேல இருக்கிற லவ்வுதான் காரணமாம். இப்படி ஊர்க்கட்டுப்பாட எதிர்த்து திரிஷா குருவி வளர்க்குறது பிடிக்காம, வில்லன் திரிஷாவோட குருவிய தூக்கிக்கிட்டு பக்கத்துல இருக்கிற காட்டுக்குள்ள ஓடிடுறான்.

இதக்கேள்விப்பட்ட நம்ம ஹீரோ விஜய், தன் வீட்டுல வளர்க்கிற குருவி மேல ஏறி, திரிஷாவோட குருவியை தேடுறாரு. பகலெல்லாம் தேடிய களைப்புல, கொஞ்சம் அசந்து இருக்கும்போது, ஒரு பருந்து வந்து விஜயோட குருவியை தூக்கிக்கிட்டு போயிருது. ஹீரோ விஜய், அந்த பருந்து பின்னாலயே போயி, அதோட சண்ட போட்டு, தன்னோட குருவிய மீட்டுடுறாரு. அந்த பருந்த அடிச்ச அடில, அது எல்லா உண்மையையும் சொல்லிருது. வில்லன் அனுப்புன ஆளுதான் நானு; வில்லன் எந்த இடத்துல இருக்காருங்குறதையும் சொல்லிருது.

விஜய் திரும்பவும், தன்னோட குருவி மேல ஏறி, வில்லனை தேடிக் கண்டு பிடிச்சி, சண்டை போடுறாரு. நடந்த துப்பாக்கிச் சண்டையில, வில்லன் சுட்ட எந்த குண்டும் இவ்வளவு பெரிய விஜய் மேல படவே இல்ல. ஆனா, பாவம் அந்த திரிஷாவோட சின்ன குருவியோட கால்ல குண்டடி பட்டுறுது. நல்ல வேளை ஹார்ட்ல படல.

விஜய் வில்லன அடிச்சுப் போட்டுட்டு, அந்த குருவியத் தூக்கிக்கிட்டு, தன்னோட மருத்துவமனைக்கு கொண்டுவந்து, ஆப்பரேஷன் பண்ணி, அந்த குருவியக் காப்பாத்தி, திரிஷா கையில குடுக்குறாரு.

இதுவரைக்கும் விஜய் ஊருக்காரங்க மட்டும்தான் விஜய்யை டாக்டர்.விஜய்னு கூப்பிட்டுக்கிட்டு இருந்தாங்க. இந்த சம்பவத்துக்கு அப்புறம், ரெண்டு ஊருக்காரங்கலூம் சமாதானமாகி, அந்த ஊருக்காரங்க மட்டுமில்லாம, சுத்துப்பட்டி எல்லா ஊரு மக்களும் டாக்டர்.விஜய் டாக்டர் விஜய்னு கூப்பிடுறதுதான், படத்துல பினிஷிங் டச்சாம்.

அப்புறம் என்ன.. விஜய்-திரிஷா ஜோடி ஒண்ணு சேர்ந்து, குருவிகளோட சந்தோஷமா இருக்காங்க.

மேலும் படிக்க : http://tamizhodu.blogspot.com/

0 comments: