Saturday, April 19, 2008

மலேசியாவில் தமிழ் நாளிதழுக்கு தடை


கோலாலம்பூர்: மலேசியாவின் முன்னணி தமிழ் நாளிதழான மக்கள் ஓசைக்கு அந் நாட்டு அரசு தடை வித்துள்ளது.இந்த நாளிதழின் உரிமம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் காலாவதியானது. இதனால் கடந்த ஆண்டு ஜூலை மாதத்திலேயே உரிமத்தை புதுப்பிக்கக் கோரி இந்த நாளிதழ் நிர்வாகம் மலேசிய உள்துறை அமைச்சகத்திடம் கடிதம் அளித்திருந்தது.

ஆனால், மலேசிய அரசு உரிமத்தை புதுப்பிக்காமல் இழுத்தடித்து வந்தது. இருப்பினும் பத்திரிக்கை தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருந்தது.

இந் நிலையில் நேற்று இந்த நாளிதழுக்கு மலேசிய அரசிடம் இருந்து ஒரு கடிதம் வந்தது. அதில் உரிமத்தை புதுப்பிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கை ஏற்கப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

இதனால் இந்த நாளிதழை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அரசின் இந்த உத்தரவை எதிர்த்து மனு தாக்கல் செய்யப் போவதாக மக்கள் ஓசையின் பொது மேலாளர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.

உள்துறை அமைச்சக அதிகாரிகளை சந்தித்து மேல் முறையீடு செய்யப்படும் என்றார். அவர் கூறுகையில், 1992ம் ஆண்டு முதல் நாளிதழ் வெளியாகி வருகிறது. திடீரென மூடச் சொன்னால் இங்கு பணியாற்றும் 102 தொழிலாளர்களின் நிலைமை, அவர்களது குடும்பங்களின் கதி என்ன ஆகும்.மலேசியாவில் இந்தப் பத்திரிக்கை தினமும் 52,000 காப்பிகள் விற்று வருகிறது.

கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி இந்த பத்திரிக்கையில் இயேசு கிருஸ்துவை அவமதிக்கும் வகையில் ஒரு படம் வெளியானது. இதையடுத்து இதன் பதிப்பு உரிமத்தை உள் நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.

0 comments: