Tuesday, April 22, 2008

சானியாவுக்கு 2 புள்ளி சறுக்கல்


டெல்லி: மகளிர் டென்னிஸ் தர வரிசைப் பட்டியலில் சானியா மிர்ஸா 2 புள்ளிகள் சறுக்கி 32வது இடத்திற்கு வந்துள்ளார்.கையில் ஏற்பட்ட காயத்தால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சானியா டென்னிஸ் போட்டிகளில் கலந்து கொள்ளாமல் இருக்கிறார்.

இதனால் தர வரிசைப் பட்டியலில் அவருக்கு சறுக்கல் ஏற்பட்டுள்ளது.இதுவரை 30வது இடத்தில் இருந்து வந்த சானியா தற்போது 32வது வரிசைக்குப் பின்னேறியுள்ளார்.

அதேசமயம் இரட்டையர் வரிசையில் தொடர்ந்து 19வது இடத்தில் இருக்கிறார் சானியா.இந்திய வீரர்கள் லியாண்டர் பயஸும், மகேஷ் பூபதியும் தொடர்ந்து முறையே 24 மற்றும் 13 வது இடங்களில் உள்ளனர். - நன்றி - தேட்ஸ் தமிழ்

0 comments: