Tuesday, February 10, 2009

பெங்காலி டைகர் இப்போ சின்னத்திரையில்

பெரிய திரையில் வலம் வரும் ஹீரோயின்கள் தான், சீரியல்களைத் தேடி சின்னத்திரைக்கு வருவார்கள். அதுபோல முன்னாள் கிரிக்கெட் அணி கேப்டன் கங்குலி, பெங்காலி டிவியில் குவிஸ் ஷோ நடத்தப்போவதாக செய்தி வந்துள்ளது.

முகமது அசாருக்குப் பின் இந்திய அணிக்கு அதிக வெற்றிகளைத் தேடித்தந்த பெருமை கங்குலிக்கு உண்டு. இந்திய அணியை கம்பீரமாக வழி நடத்திச் சென்ற கங்குலிக்கு நேரம் சரியில்லையோ என்னவோ, பல்வேறு ஏற்ற இறக்கங்களைக் கண்ட அவரது கிரிக்கெட் வாழ்க்கை சில மாதங்களுக்கு முன் ஓய்வுக்கு வந்தத.

பெங்காலியில் முன்னனி டிவியான ஜீ பங்களா டிவியின் இந்த குவிஸ் ஷோவிற்கு "தாதாகிரி" என பெயர் சூட்டியுள்ளனர்.
வாழ்த்துக்கள் தாதா !

0 comments: